யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்றையதினம் (24) இரவு வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலைக்கவசம் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த மூன்று நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாழ். காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.