பண்டிகைக் காலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்காக சுமார் 150,000 ப்ரீத் அலைசர் கருவிகள் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை தேடும் நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.