பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை இராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதற்கிடையே, பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.