தாழ்வு பகுதி இன்று தீவிர தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மாலைக்கு பின் வடக்கில் ஆங்காங்கே மழையை கொடுத்து இருக்கிறது. தற்போது கடலில் மழை பொழிந்து கொண்டு இருக்குறது. நள்ளிரவு நள்ளிரவுக்கு பின் வடக்கில் மழை அதிகரிக்கும். 11,12 ஆம் திகதிகளில் வடக்கில் சற்று கூடுதல் மழையை எதிர் பாக்கலாம். ஒரு சில இடங்களில் சற்று பாதிக்கும் மழையாக அமையும். கிழக்கில் பெரிய மழைக்கு வாய்ப்பு இல்லை ஆங்காங்கே லேசான மிதமான மழை இருக்கும்.* *திருகோணமலையில் சற்று கூடுதல் மழை இருக்கும். நாளை(11) வடக்கில் சற்று கூடுதல் காற்றுடன் மழை இருக்கும். கடலோரப்பகுதிகளில் சற்று வலுவான காற்றுடன் மழை இருக்கும்.அதிலும் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கடலோரப்பகுதிகளில் காற்றுடன் மழை இருக்கும். 13, 14 ஆம் திகதிகளிலும் வடக்கில் லோசான மிதமான மழை இருக்கும். 15 ஆம் திகதி மேக மூட்டம் தூறல் இருக்கும். 16 ஆம் திகதி அடுத்த நிகழ்வு மழையை தொடக்கும் வகையில் அமையும். அது மேலும் தீவிர நிகழ்வாக தாழ்வு மண்டலமாக நெருங்கும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது