குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக அமெரிக்கன் சிலோன் மிசன் முன்பள்ளி மாணவர்களை வழியனுப்பும் விழாவும், ஒளிவிழாவும் நேற்றைய தினம் காலை 10:30 மணியளவில் குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக போதகர் கமலகுமாரன் தலைமையில் இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்ட பின்னர் மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து முன்பள்ளியிலிருந்து பாடசாலைக்கு செல்லும் 12 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் கருத்துரையை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி வலய முன்பள்ளி கல்விப் பணிப்பாளர் கே.சத்தியசீலன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் குடத்தனை கிராம சேவகர் திருப்பதி நிசாந்தன் சிறப்பு விருந்தினராகவும், கௌரவ விருந்தினராக வடமராட்சி கிழக்கு முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருணதி ஜெயந்தினி சிவஞானம், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கிறிஸ்து நற்தூது பணியகத்தினர் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து ஒளி விழா இடம்பெற்றது.