புத்தளம் – பல்லம, அடம்மன பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (2) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த தம்பதியினர் ஆனமடுவ, ஊரியாவ பகுதியில் மரண வீடொன்றுக்கு உந்துருளியில் சென்றுவிட்டு, மீண்டும் மாதம்பை பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். இதன்போது, குறித்த கணவனும், மனைவியும் பயணித்த உந்துருளியும், சிலாபத்தில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த விபத்தில் மாதம்பை, தனிமெல்கம பகுதியைச் சேர்ந்த ஏ.இந்திரா (வயது 30) எனும் திருமணமான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், அவரது கணவரான 32 வயதுடைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
ரகித மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க...
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என அறிவிப்பு!
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். வரி செலுத்துநர் அடையாள...
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியிலான சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு இன்றையதினம் இடம்பெற்றது!
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வானது இன்றையதினம் (25.06.2026) சபையின் தவிசாளர் செல்வி இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உப தவிசாளர் சத்தியமூர்த்தி சத்தியவரதன் அவர்களால்...
மஸ்கெலியா நகரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்து, மஸ்கெலியா பிரதேச சபையால் மஸ்கெலியா நகரில் சமீபத்தில் ஒரு டெங்கு ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மஸ்கெலியா நகரின் பிரதான வீதிகளில்...
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விபத்து!
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்த பகுதியில் ஒரு மோட்டார் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வட்டவளை பொலிஸ் நிலைய...
போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.பதவியில் இருந்து...
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்!
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளார் என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான நிலையில்...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு பிரதமரிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை!
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு வன்னிமாவட்ட...










