வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு 11 மணியளவில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்தப் பெண் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.