வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 08 பேர், கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் ஆதியம்பலம், கோவை பகுதியில் சுற்றுலா விடுதியில் வைத்து திங்கட்கிழமை (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள் இலங்கையின் குடிவரவு நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியுள்ளனர். ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கிலேயே தங்கிருந்ததாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவியை பொலிஸார் பெற வேண்டியிருந்தது.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (19) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.