நாட்டில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (17) பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குருநாகல், கேகாலை, மாத்தளை, மாத்தறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.