நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை ஆகும்.