அநுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரவிலகல சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், நேகம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
விறகுகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ள நிலையில் கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.