கம்பஹா மினுவாங்கொட வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கம்பஹா காவல்துறையினரால் நேற்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்களும், 90 போலி கொரிய நாணயத்தாள்களும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.