இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ, ட்லாக்ஸ்கலா மாகாணத்தில் உள்ள அபிசாகோ நகரில் இரும்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. ங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.