உலகின் பல பகுதிகளில் போர் பதற்றம் நிலவும் நிலையில், சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வது என சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ், ஈரான், ஹிஸ்புல்லா மோதல், ரஷ்யா உக்ரைன் மோதல், என உலகின் பல பகுதிகளில் போர் பதற்றம் காணப்படும் நிலையில், கூடுதல் வெளிநாட்டு ஆபரேஷன்களில் பங்கேற்பது குறித்து சுவிஸ் ராணுவம் திட்டமிட்டுவருகிறது.
இப்படி வெளிநாட்டு ஆபரேஷன்களில் பங்கேற்பது சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புக்கு பங்களிப்பை ஏற்படுத்தும் என நம்புவதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, 1999ஆம் ஆண்டு முதல், Kosovo peacekeeping mission, KFOR என்னும் அமைதிகாக்கும் திட்டத்தில் சுவிட்சர்லாந்து பங்கேற்று வருகிறது.
சுவிஸ் ராணுவ வீரர்கள் 215 பேர் தற்போது Kosovo நாட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில், சுவிஸ் மாகாணங்கள் கவுன்சிலின் வெளி விவகாரங்கள் கமிட்டி, கூடுதல் வெளிநாட்டு ஆபரேஷன்களில் சுவிட்சர்லாந்து பங்கேற்பதை எளிதாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.