வடக்கு கிழக்கு நிர்வாகம் மற்றும்; அபிவிருத்தியை தமிழரசு கட்சி பொறுப்பெடுத்து சரியான பாதைக்கு கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம் எனவே எங்களை மக்கள் பேரம் பேசம் சக்தியாக மாற்றவேண்டும் அப்போது நாங்கள் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவே விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களிடம் இருக்கம் ஒரே ஒரு ஆயுதம் வாக்குரிமை மட்டும்தான் அதனை வீட்டுக்குவாக்களித்து சரியாக பயன்படுத்துங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்
தமிழரசு கட்சி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயற்பாட்டு பிரிவினர் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கல்லடி ரிற்று ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றபோது நா.உ. இரா சாணிக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சி இந்த முறை தனித்துவமாக தூய்மையான கறைபடியாத கொலை செய்யாத பட்டியலுடன் முன்னோக்கி போகின்றது உண்மையிலே இந்த தேர்;தலிலே ஏனைய கட்சிகளை உள்வாங்கி பட்டியல் தயாரிக்க வேண்டும் என கட்சிக்கு வெளியில் இருக்கும் சிலர் பிரச்சனை எடுத்தார்கள் அப்போது நான் தெரிவித்தேன் நாங்கள் போட்டி போடுவதாக இருந்தால் வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டத்தில் ஒரே மாதிரியாக தனித்து போட்டிபோடவேண்டும் என்றேன்
வீட்டில் உள்ள போய்களை வீட்டை விட்டு விரட்டிவிட்டோம் என சிலர் வாழ்த் துக்களும் நன்றிகளும் தெரிவித்துள்ளனர். கட்சியை பொறுத்த மட்டில் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி அவரின் காலத்திலும் சரி பின்னரும் தாங்கள் தாங்கள் நினைத்தபடி செய்யகூடிய வாய்பு இருக்கவில்லை அவர்கள் கட்சி கட்டுபாட்டிற்குள் இருந்து கொண்டிருந்தனர்.
ஆனால் 2020 தமிழ் தேசிய கூட்டமைப்பில்; 10 பாராளுமன்ற உறப்பினர்கள் தெரிவாகினோம். இதில் 6 பேர் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் ஏனைய நான்கு பேரும் ஏனைய கட்சியை சேர்ந்த இவர்கள் 4 வருடமாக சிலர் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கவில்லை இவர்கள் ஒருவருக்கும் கட்டுப்படாது தங்களுடைய தேவையை கருதி செயற்பட்டார்கள்;.
2022 புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யும் கூட்டம் மறைந்த தலைவர் சம்மந்தன் ஜயா வீட்டில் நடந்தது அப்போது சம்மந்தன் ஜயா எமது கட்சி தமிழ் மக்களை வழிநடாத்தும் கட்சி எனவே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார் ரணிலை ஆதரிப்பது ராஜபக்ஸ குடும்பம் எனவே ரணிலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு சஜித்தையும் டலஸ் அலகப்பெருமாளை அழைத்து ஆதரவுவழங்குவதாயின் அதிகார பகிர்வு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை, மேச்சல்தரை காணி அபகரிப்பு தொல்பொருள் போன்ற பல பொதுவான விடையங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்தோம்.
அடுத்தநாள் வாக்கெடுப்பு முடிவடைந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணிலை அன்று மாலை 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சம்மந்தன் ஜயா தலைமையில் சந்தித்க சென்றபோது ஜயா ரணிலிடம் நாங்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்தோம் என்றார் அப்போது ரணில் இல்ல உங்களுடைய ஆட்கள் சிலர் எனக்கு வாக்களித்தனர் என இது தான் ஒற்றுமை ஒற்றுமை என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடாத்தி வந்தனர்.
அந்த வகையில் தமிழரசு கட்சி தனித்துவமாக களமிறங்க தீர்மானித்தது தனித்து களமிறங்கியுள்ளோம் இது எங்கள் கட்சிக்கு பாரிய வெற்றியைத்தரும்.
திசைகாட்டி சின்னத்தில் வடகிழக்கிலும் சரி தென்னிலங்கையிலும் சரி நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் யார் என்று தெரியாதவர்கள் இப்படியான நிலையில் அனுராவுக்கு தேர்தலில் கிடைத்தது 42 வீத வாக்கு இந்த வாக்கு எதிர்வரும் தேர்தலில் கிடைக்குமாக இருந்தால் அவர்களுக்கு 100 ஆசனம் கிடைக்கலாம் அவர்கள் ஆட்சியமைக்க கொலை கொள்ளை ஊழல் மோசடி உட்பட கட்சிகளை சேர்ந்தவர்களை சேர்க்கமாட்டேன் என்றதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் நேர்மையான ஒரே ஒரு கட்சி நாங்கள் மட்டும் தான் உள்ளோம்.
எனவே அவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை எடுக்க வேண்டும் என்றால் நாங்கள் அதிகளவாக 13 ஆசனங்களை எடுத்தால்; அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவே நாங்கள் சேருவதா இல்லையா ஆதரவு கொடுப்பதா இல்லை என்பது இரண்டாவது கட்டம் எனவே அப்படியான சக்தியாக இருந்தால் தேவைவரும் போது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கமுடியும். எங்களுக்கு சந்தர்ப்பங்கள் வரும் போது பேரம் பேசவேண்டும் சரியாக பயன்;படுத்தவேண்டும் அதுதான் அரசியல் சாணக்கியம்.
எனவே மக்கள் தமிழரசு கட்சியை பேரம் பேசும் சக்தியாக மாற்ற வேண்டும் ஒரு இலங்கைக்குள் அரசியல் தீர்வு விடையம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீதிவேண்டும் விசாரணை பொறுப்புகூறல், அபிவிருத்தி தொடர்பாக வடகிழக்கில் விசேட அபிவிருத்தி நிதியம் நிறுவது போன்றவை தொடர்பாக பேரம் பேசப்படும்
எனவே எங்களை பேரம் பேசும் சக்தியாக மாற்றினால் வடக்கு கிழக்கை நாங்கள் பொறுப்பெடுத்து சரியான பாதைக்கு கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம் என்வே வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து 3 ஆசனங்களை பெற்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.