இம்முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுநர் தரப்பிலோ எதிர் தரப்பிலோ பாராளுமன்ற உறுப்பினரானால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக்
கிண்ணியாவில் உள்ள மத்திய காரியாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 2020ம் ஆண்டில் அமோக வெற்றிவாகை சூடிய நான் இம் முறை அதனை விட மூன்று மடங்கு களத்தில் இறங்கியுள்ளேன். திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் திறம்பட கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன் என கூறினார்.
24 வருட கால அரசியலில் சமூகத்துக்காக என்னை அர்ப்பணம் செய்து பல அபிவிருத்திகளை கிராமம், நகரம் என செய்து காட்டியுள்ளேன். திருகோணமலை மாவட்டம் இரு ஆசனங்களை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆளுங்கட்சி அரசாங்க பிரதிநிதியாகவோ அல்லது எதிர்க்கட்சி பிரதி நிதியாகவோ எதுவாக இருந்தாலும் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு சேவைகள் இடம்பெறும் என தெரிவித்தார்.