வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே குறித்த மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.