கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிபதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோற்றிய 38 வேட்பாளர்களில் 18 வேட்பாளர்களே இதுவரை தமது செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று பிற்பகல் 3 மணியுடன் குறித்த கால அவகாசம் நிறைவடையவுள்ள நிலையில், இது தொடர்பான அறிக்கைகளை அதற்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.