மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெருந் தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு தோட்ட வாரியாக தெளிவூட்டும் செயல் அமர்வு நடத்தி வருகின்றனர்.
அதற்கு அமைய மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட ஏழு பிரிவில் உள்ள 35 தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இன்று காலை முதல் மதியம் வரை இப் பகுதியில் உள்ள அரிய வகை கரும் புலிகள் மற்றும் ஏனைய புலிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த செயல் அமர்வு இடம் பெற்றது.
குறிப்பாக புலிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது நாம் ஏதாவது தீங்கு விளைவித்தால் தவிர. ஆகவே இப் பகுதியில் வலையிட்டு வன மிருகங்களை வேட்டையாட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள்.
பன்றிகளுக்கு போடப் படும் வலையில் சிக்கிய புலி பல மரணித்த நிகழ்வு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவிலும் லக்கம் தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது.
அதேபோல் லக்சபான வாழமலை பிரிவில் கரும் புலி வலையில் சிக்கிய காப்பாற்ற முடியாது மரணித்து உள்ளது. ஆகையால் இவ்வாறு இனி இடம் பெறாத நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.