ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டிகள் இன்று (03.10.2024) ஆரம்பமாகியுள்ளன.
இதன் ஆரம்ப ஆட்டத்தில், இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த எட்டு பதிப்புகளில் இருபதுக்கு20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதிப்பெறவில்லை.
எனினும், தற்போதைய நிலையில் இலங்கை மகளிர் அணி வலுவான அணியாக கருதப்படுகிறது. எனவே இலங்கை அணி, இந்தமுறை போட்டிகளில், ஏனைய அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம்.
இதன் மூலம் இலங்கை அணி, இந்த முறை உலகக்கிண்ண போட்டிகளின் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான், கடந்த பதிப்புகளில் பல தோல்விகளைச் சந்தித்துள்ளது. எனவே, இலங்கை அணியுடனான இன்றைய ஆட்டத்தில் அது, சவால்களை எதிர்கொள்ளும் என்றே கிரிக்கட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே, இந்த ஆண்டு ஆசிய கிண்ணத்தின் அரையிறுதி உட்பட பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.