நாளை மறுதினம் 4 ம் திகதி
இலங்கை வர இருக்கின்ற இந்தியவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.
அவை வருமாறு
1, 1974 ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்ததஸதுன் 6-வது சரத்தில் பிரகாரம் பாரம்பரியமாக கடலில் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்யதல்,
2, இலங்கை சிறையில் உள்ள 125-க்கு மேற்பட்ட இந்திய மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 190-க்கு மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை உடனடியாக மீட்டுத்தருமாறும்,
3, இந்திய நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு தமிழக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் மீன்பிடி படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்
4, இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 10க்கு மேற்ப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்திய தமிழ்நாடு தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சேனாதிபதி சின்னத்தம்பி,
தலைவர்,
தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 7200920000