Browsing: யாழ் செய்திகள்

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த வருடம் 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் மக்களின் வாழ்விடங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி இன்று(12) அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலும் 500 ஏக்கர் நிலத்தைச் சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றது. இதற்குத் தாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு அவசர சந்திப்புக்கு மாவட்ட அரச அதிபருக்கு எழுத்தில் கடிதம் வழங்கியபோதும் அவர் […]

அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். […]

இன்று அதிகாலை (12:02:2024) கொழும்பில் இருந்து வருகை தந்த பேருந்து யாழ் எழுதுட்டுவாழ் பொலிஸ் இராணுவ சோதணை சாவடிக்கு முன்னால் உழவு இயந்திரத்துடன் மோதுண்டு கோர விபத்திற்குள்ளாகியுள்ளது.!!!! குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம்,  மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்படி விடயம் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முக்கிய விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024.02.23 ஆந் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை […]

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று சிறப்பாக இடம்பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வயலின் இசை கச்சேரி இடம் பெற்றது. இதில் வயலீனை ஸ்ருதிவேந்தன் அ. ஜெயராமன், மிருதங்கம் நந்தகுமார், தம்புரா விசயன் ஆகியோர் அணிசெய் கலைஞர்களாக கலந்து கொண்டு இன்னிசை விருந்தை நடாத்தியிருந்தனர்.மேலும் ஆண்மீக உரையும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலா […]

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டத்தில் நிர்வாக செயல்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது அதாவது வருகின்ற 13.03.2024 வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து யாழில் ஒரு புதிய மீன்பிடி சட்டம் தொடர்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் நிர்வாகம் கலந்துரையாடுவதாகவும்,அந்த சட்டத்தை எதிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது 13.03.2024 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் இருக்குமாயின் அந்த திகதிகளில் மாற்றம் செய்யப்படுமெனவும் இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழில் இணையத்தின் நிர்வாக […]

பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இன்றையதினம் அவரது இல்லத்தில் […]

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் சனிக்கிழமை (10) கைது செய்யப்பட்டார். தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே தெல்லிப்பழை பொலிஸாரால் ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் 11.02.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.