Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: மன்னார் செய்திகள்
வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினரால் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றி வளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 லீற்றர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது இந்த இரண்டு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் இன்று (10) வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர் குறித்த அரிய வகை ஆமை கடல்பகுதியில் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக கரையை நோக்கி கொண்டு வந்த நிலையில் படகில் இருந்த மூன்று மீனவர்களையும் கடற்படை கைது செய்துள்ளதுடன் மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களை ஒப்படைத்திருந்தனர். இந்த நிலையில் மூவரையும் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் மன்னார் […]
மன்னார் – சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 20 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 02 சந்தேகநபர்கள் (ஆண் மற்றும் பெண்) 1200 Pregabalin மாத்திரைகளை விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் சிலாவத்துறை நானாட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் 07.02.2024 சிலாவத்துறை நானாட்டான் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை கடற்படையினர் மேற்கொண்டனர் இந்த சுற்றிவளைப்பின் போது நானாட்டான் பகுதியில் சந்தேகத்தின் பேரில் 02 நபர்களை சோதனையிட்டதுடன் சந்தேகநபர்கள் வசம் இருந்த 1200 Pregabalin மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. கைது […]
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து பாடசாலை மாணவர்கள் , பெற்றோர் ,கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர் இன்றைய தினம் (7) காலை பாடசாலைக்கு முன் குறித்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இன்றி கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்வதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. […]
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று புதன்கிழமை மதியம் இடம் பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார். இந்த நிலையில் அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் […]
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்துள்ளனர்.மேலும் கள்ளியடி பாடசாலையில் கடமையாற்றும் அதிபரை இடமாற்றம் செய்து கள்ளியடி பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இல்லாமல் கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள் இதற்கு மடு வலயக் கல்விப் பணிப்பாளரின் செயல்திறனற்ற தன்மையே காரணம் என கள்ளியடி கிராம மக்கள், பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மடு கல்வி வலயத்திற்கு […]
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை(5) காலமானார். அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. -இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை புதன்கிழமை (7) காலை தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு […]
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிசார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படையும் அதிலிருந்து சுமார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் […]
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும், மாவட்ட…