Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுள்ளார். இந்த மாநாடு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் 09 முதல் 10 வரை நடைபெற உள்ளது. இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி வெளியேறியிருந்தார். ஜனாதிபதியுடன் தூதுக்குழுவொன்றும் சென்றுள்ளதுடன், அவர்கள் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (08) அதிகாலை 12.45 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு SK-469 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு […]
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் துப்பாக்கி வழங்கிய நபரே கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி காலை, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 28 ஆயிரத்து 493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரியாக நாளொன்றில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இது வழக்கத்தைவிட அதிகமான தொகை என்று கூறப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மொத்தமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர் என சுற்றுலா அபிவிருத்தி […]
இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேலை நேற்று சந்தித்துள்ளனர். குஜராத்தின் சட்டசபை கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதற்கான அபிவிருத்தி மூலோபாய திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தின் நிர்வாக செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் பதிவு நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தமது வீடுகளுக்கு கிடைத்துள்ள வாக்காளர் விண்ணப்பபடிவதில் 18 வயதை அடைந்தவர்கள் மற்றும் வீட்டில் தங்கியிருக்கும் சகல நபர்களின் தகவல்களையும் உள்ளடக்க வேண்டியது கட்டாயம் எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். […]
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தாக்கியதால் சிறைக்காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலினால் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் , சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 308.49 ரூபாவாகவும், 318.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இலங்கை இராணுவத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு கோரப்பட்டது. எனினும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை. […]
பொதுப் போக்குவரத்துகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நேற்றைய (07) தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், பொது போக்குவரத்துக்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கையாள்வதற்காக பொலிஸாரினால் இன்று (08) முதல் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள், பேருந்து நிலையங்கள், இரயில் […]