Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
இவ் வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா சதொசவிற்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் அண்மித்து வருவதனால் சந்தையில், முட்டைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது சதொச சிறப்பங்காடிகளிலும், சில்லறை வர்த்தக நிலையங்களிலும் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடிவதில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேநேரம், திங்கட்கிழமை (12) முதல் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை ரூ. 65க அதிகரிக்கலாம் என […]
இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும், அதாவது sea of Sri Lanka என்று சொல்லப்படுகின்ற கடற்பரப்பை ஊடறுத்து ஒரு கடல் வழிப் பாதையை உருவாக்கி அதை இந்தியாவிடம் தாரை வார்க்கக் கூடிய ஒரு செயற்பாட்டை ஊடக […]
இந்திய முதலமைச்சர் எங்களுடைய படகுகளை தங்களுடைய எல்லைக்குள்ளே அனுமதித்து அங்கு மீன் பிடிப்பதற்கு வழிவகுப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. அதனை செய்ய முன்வராமல் தங்களுடைய மீனவர்களது நலன் கருதி எங்களுடைய வளங்களை அழித்து, எங்கள் வாழ்வாதாரத்தை சூறையாடி, எங்களை பட்டினிச்சாவிலே இட்டுச் செல்வது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மீது கருணை இல்லாத அல்லது துரோகமான செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது என வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் […]
நுவரெலியா பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மாகாஸ்தோட்ட பகுதியில் வசிக்கும் சிவகுமார் திலக்சன் எனும் 12 வயதுடைய பாடசாலை சிறுவன் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது இன்று 11.02.2024 நண்பகல் ஒரு மணி அளவில் எதேச்சையாக ஊஞ்சலில் கயிறு இறுகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் தற்போது நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக நுவரெலியா பொலீசார் தெரிவிக்கின்றனர்.
கொடிகாமம் கச்சாய் – புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை ஐந்து மணியளவில் நெல்லை உலரவிடுவதற்காக பரவிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை அதனாலேயே […]
குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றம் நடாத்திய கலைவிழா 08.02.2024வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில், இளையோர் மன்ற தலைவர் செல்வன் விக்டர்குமார் சுரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைகழக கிறிஸ்தவ கற்கைகள் விரிவுரையாளர் அருட்பணி மவி.இரவிச்சந்திரன் அடிகளார் பிரதம விருந்தினராகவும் குருநகர் சுகாதார மேம்பாட்டு அமைய ஆலோசகர் திரு ஐயாத்துரை சந்திரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் யாழ் புனித மரியாள் […]
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட நபரிம் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 400,000 ரூபாய் இருந்தது என்றார். சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையில் அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அவர் சமூக […]
கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விகாரையின் பராமரிப்பில் இருந்த அசேல என்ற யானைக்கு விஷம் வைத்து கொல்வதற்கு முயன்றார் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தர்பூசணி (Watermelon) காய்க்குள் விஷத்தை கலந்தே இந்த நபர் அசேல என்ற யானைக்கு கொடுப்பதற்கு முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கண்டி, கட்டுகித்துல, பன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வேறு சில சம்பவங்களுக்காக கண்டி […]
இலங்கையில் இருதய நோயாளர்கள் பதிவாகின்றமை திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கம்பளை முன்பள்ளியில் மரம் விழுந்து படுகாயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த, சிறுவன் மரணமடைந்தார். அவரது ஜனாஸா, கம்பளை கஹடபிட்டியவில், சனிக்கிழமை (10) இரவு இடம்பெற்றது. மரம் விழுந்த சம்பவத்தில், அதே பாடசாலையில் கல்விக்கற்ற சிறுவன், சம்பவ தினத்தன்று ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டாவது மாணவனான சிறுவன், கம்பளை, கஹடபிட்டிய, பேபில பிரதேசத்தில் வசிக்கும் மொஹமட் இக்ரம் ஹையானின் (வயது 5) சிறுவனின் ஜனாஸாவே […]