Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
What's Hot
Browsing: இலங்கை செய்திகள்
ஜகத் பிரியங்கர சற்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வைப் பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் ஊடகங்களுக்கு தெவித்துள்ளனர். இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் கடந்த 06ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக […]
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலில் இருந்தும் கன்டெய்னர் பெட்டிகளை இறக்கும் பாரந்தூக்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தது. கப்பலில் இருந்து தரைக்கு இறக்கும் மிகப்பெரிய 12 கிரேன்கள் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முதற்பகுதியாக 3 கிரேன்கள் கடந்தவாரம் இலங்கைக்கு வந்துசேர்ந்தது. 12 ( sts ) கிரேன்கள், 40 ரயிலுக்கு ஏற்றும் தானியங்கி கிரேன்கள், பெட்டிகளை சுமந்து செல்லும் கெரியர்கள் என்பன 282மில்லியன் டொலருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. குறித்த பாரம்தூக்கிகள் கிழக்கு முனையத்தில் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. […]
வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 01.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இன்றையதினம் இரதோற்சவமும், நாளை 09.02.2024 தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, 10.02.2024 மாலை அலங்கார பூந்தண்டிகை உற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும். தேர்த்திருவிழாவுக்காக, பல்வேறு இடங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024 பெப்ரவரி 7 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ‘சமர் அலி’ – ‘லிகான் ஓமா’ ஆகிய இருவருடனும் – அதன் பின்னர் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ‘டொன் டேவிஸ்’ என்பவருடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். காங்கிரஸ் உறுப்பினர்களான சமர் அலி – லிகான் ஓமா ஆகிய இருவரும் அமெரிக்காவின் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் மிகவும் முற்போக்குவாத இளம் அரசியல் தலைவர்களாவர். இளைஞர்கள் மட்டத்தில் […]
இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவொன்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவாதாக கூறியுள்ளார். […]
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க வந்த வேலன் சுவாமிகள் மனம் நொந்தமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்றையதினம் (07.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சில கட்சிகள் பிரதேசவாதத்தை கையாண்டாலும் தமிழ்த்தேசிய பாதையில் பயணிக்கும் கட்சியான இலங்கைத் தமிழரசு கட்சி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், தமிழர் போராட்டத்துக்கு ஆதரவு […]
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிலோன் சாய்ஸ் பிரைவேட் லிமிடெட் பசியோடு வருபவர்களுக்கு இங்கே இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளனர். திங்கள் முதல் ஞாயிறு வரை மு.ப 12.00மணியிலிருந்து 1.30வரை சேவை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதியில் பங்கேற்ற கில்மிஷா,அசானி உள்ளிட்டவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இந்ந பயணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் கில்மிஷா,போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா, கனிஷ்கர் மற்றும் பார்வையாளர்கள் தேர்வான அசானி ஆகியோர் ஜேர்மனி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இத்தகவலை கில்மிஷா தனது முகநூலில் பகிர்ந்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.