Browsing: இலங்கை செய்திகள்

புதிய களனி பாலம் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருத்தப் பணிகள் காரணமாக பாலம் நேற்று முன்தினம் 9 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவை நோக்கியும், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துறைமுகத்தை நோக்கி பயணிக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணாவார்.   சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்  தடுப்பு  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து விற்பனை  மற்றும் கொள்வனவு நிறுவனங்களையும் விசாரிக்கும் பணியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் மருந்து கொள்வனவு செய்த நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தொடர்புடையவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மேற்படி கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, பொலிஸார் […]

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4  செல்சியஸினால் அதிகரித்துள்ளது. புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது. கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அழுத்கல பகுதியில் முச்சக்கர வண்டியும், அரச பேருந்து ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பத்தனை ஜயசிரி புரவை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் 30 வயது உடைய பெண்ணும் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரச பேருந்து அதன் சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி உட்பட முச்சக்கர வண்டியும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து […]

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (10) இரவு நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகியதுடன், ​​7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றினார். மேலும், பல நாடுகளின் அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார ஆரம்பத்தில் இருந்து வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி, இதுவரையில் கிடைத்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விரைவாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்கான காரணம் தனிப்பட்ட காரணங்களா, பணிச் சுமையா என்பது தெரியவரவில்லை.

நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று 09, ம் திகதி இன்று 10, ம் திகதி சனிக்கிழமை என்பதால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய அதிக அளவில் ஹட்டன் வழியாகவும் இரத்தினபுரி காவத்த வழியாகவும் யாத்திரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். சுமார் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது பக்தர்களின் வருகை. நல்லதண்ணி மரே நெடுஞ்சாலையில் மற்றும் நல்லதண்ணி மஸ்கெலியா நெடுஞ்சாலையில் ரக்காடு கிராமம் வரை தற்போது வாகனங்கள் வீதியின் இரு பக்கங்களிலும் […]