Browsing: வெளியிட்ட

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி; சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி; தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அதிபர் அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

இலங்கையில் வருடாந்தம் 250 முதல் 300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார். சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய […]

சமூக வலைதளங்களில் பல்வேறு மதங்களின் அடையாளப் பாத்திரங்கள் குறித்தும், அவர்களை உயிருடன் பார்க்கும் வாய்ப்புகள் குறித்தும் அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் நடந்த இதுபோன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கத்தோலிக்க மதத்தின் பிரதான பாத்திரமான இயேசுவின் தாயாக கருதப்படும் ‘அன்னை மரியாள்’ உருவத்தை ஒத்த உருவம் கொண்ட பெண் ஒருவர் கந்தானை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் காணொளியே இதற்கு காரணம். அடையாள விபரங்களை வெளிப்படுத்திய பொலிஸார் கத்தோலிக்கர்கள் வழிபடும் ‘அன்னை […]

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நபர்களை நியமித்ததன் மூலம் அதன் பணி வினை திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களாக முயற்சித்து வருகிறோம், பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை அதனை வர்த்தமானியில் வெளியிட.எனவே இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண […]

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி விலைகள் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காணி உரிமையற்ற இருபது லட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் காணிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டில் காணிகளுக்கு நிலவி வரும் செயற்கை விலை அதிகரிப்பு குறைவடையும்.. எதிர்காலத்தில் காணி விலை, கடை வாடகை, வீட்டு வாடகை என்பன குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காணி வளத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கில் அரசாங்க […]