Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குதித்த
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது குறித்த புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ரயில் வருகின்ற பொழுது அதனை மறித்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் […]
அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை…
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(03) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை(04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெறமாட்டாது எனவும் அதேவேளை மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பொன்றை முன்னெடுத்தனர். திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே!, முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர். பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது […]