163
இன்று மதியம் ஹட்டன் டிக்கோயா பகுதியில் அரச பேருந்து முச்சக்கர வண்டி மோதுண்டதனால் இரண்டு பெண்கள் கிளங்கன் வைத்திய சாலையில்.
மஸ்கெலியா செய்தியாளர்.செ.தி.பெருமாள்.10.02.2024.
ஹட்டன் டிக்கோயா பிரதான சாலையில் அழுத்கல பகுதியில் முச்சக்கர வண்டி அரச பேருந்து மோதுண்டதால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பத்தனை ஜயசிரி புரவை சேர்ந்த 50 வயது உடைய பெண்ணும் 30 வயது உடைய பெண்ணும் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
அரச பேருந்து அதன் சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி உட்பட முச்சக்கர வண்டி அனைத்தும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஹட்டன் பொலிசார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.