50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் தகராறு ; ஒருவர் மீது கத்திக்குத்து!

170

50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார்.

சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.