கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வானது நேற்றையதினம் காலை 8 மணிக்கு கல்லூரி முதல்வரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான அருட் சகோதரி மரிய வசந்தி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி தெற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான உதவிக்கல்வி பணிப்பாளர் து. ஜீவானந்தனும், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி தெற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் ஜெயரத்தினம் நிசாகரும், கௌரவ விருந்தினராக பழைய மாணவி சதீசன் பியந்தினியும் கலந்து சிறப்பித்தனர்.
பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகராக செல்வி ஜோ சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். பிரதமராக செல்வி ச.புகழ்செல்வியும் குழுக்களின், தலைவராக சு.சுவாதியும் தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து அமைச்சர்களால் பாடசாலையினதும் மாணவர்களும் முன்னேற்றத்திற்கான பல்வேறு பிரேரனைகள் முன்வைக்கப்பட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்ற நடவடிக்கைக்காக 26.10.2026 அன்று வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டது.
Related Posts
உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது – பிரதமர் தெரிவிப்பு!
உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக்...
“தோல்விகளால் சோர்வடைய வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் பொருத்தமான துறை உலகில் நிச்சயம் உண்டு”
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களின் மனநிலை மற்றும் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சிறுவர்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகள்!
வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டனர். அவை வருமாறு,காசிநாதன் பின்ஹலன் 9ஏதவசீலன் தனுஷ்கா 9ஏசிறீதரன்...
தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர் தொடர்பில் அர்சுனா எம்பி வெளியிட்ட காணொளிகளை நீக்குமாறு உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த...
இராணுவ நடவடிக்கையால் மட்டுமே இந்தியா கச்சத்தீவை மீட்க முடியும்!
கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்...
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை...
செம்மணியில் குவியலாக காணப்பட்ட எலும்புக்கூடுகள்!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுசெம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு...
சர்வதேச வழிகாட்டுதல்களுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுகிறது!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி...
ஹசீஸ் (Hashish) போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது!
முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறச் சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த இளைஞன், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக வாகனப்...










