• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் தமிழ் மக்களாகிய நாங்கள் அமைதி காக்கக் கூடாது.!

Mathavi by Mathavi
June 14, 2026
in இலங்கை செய்திகள்.
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் தமிழ் மக்களாகிய நாங்கள் அமைதி காக்கக் கூடாது.!
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விசாரித்த பின்பு சூடு பிடித்திருக்கிறது.

தொடர்ந்து சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட பின்பு கைதுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (13) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மட்டுமல்ல, இவர்கள் எங்களுடைய போராட்டத்திலே மனித உரிமைகளை மீறியவர்கள் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சுரேஷ் சலேக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தம் இருக்கின்ற ஒரு சூழலில் விசாரிப்பதற்காக கைது செய்யப்பட்ட பின்பு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகின்ற விடயத்திலே, அவர் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்பு இனவாதிகள் கொஞ்சம் பேர் அவர்களைக் காப்பாற்றுவதற்கு துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் பேசுகின்ற நாங்கள் இவ்விடயத்தில் அமைதி பேணக் கூடாது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இவர்கள் எங்களுடைய தேசத்தின் அழிவை, இளைஞர்களுடைய விசாரணை என்ற பேரிலே மிக மோசமான விசாரணைகளை செய்தவர்கள் என்ற அடிப்படையில், ஒரு ஜனாதிபதி வெல்வதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கிறிஸ்தவ சமூகம் மட்டுமல்ல, அந்தோனியார் தேவாலயத்தில் வழிபாட்டிற்குச் சென்ற அனைத்து மதத்தினரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அதன் பின்பு அவர் பல இலட்ச வாக்குகளால் ஜனாதிபதியாக்கப்பட்டார். இது சந்தேகத்திற்கிடமான நிலையிலே பேசப்படுகிற விடயம்.

அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம் தீவிரவாதிகள் இதில் பங்கு பெற்றுள்ளதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் விசாரணையின் பின் தான் தெரியும் இதில் இருக்கும் பின்னணி என்னவென்று. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அமைதி காக்கக் கூடாது.

இவர்கள் மட்டுமல்ல, இனியும் மறைந்திருக்கும் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கூக்குரலை, போராட்டத்தை நாங்கள் செய்தாக வேண்டும்.

தென்னிலங்கையிலே எங்களை அழித்தவர்களை காப்பாற்றுகின்ற ஒரு செயல்பாட்டைச் செய்கின்ற சிங்கள தேசம், அதற்கு எதிர்மறையாக எங்களுடைய தமிழினம் இந்த விசாரணைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.

மனித உரிமை மீறல் செய்தவர்களாக கருதப்படுகின்ற இந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, இப்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் சுரேஷ் சலே, இன்னும் எத்தனையோ பேர்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது விட்டாலும், இந்த விடயத்திலே தமிழ் தரப்பு ஒற்றுமையாக, இந்த விசாரணையை துரிதப்படுத்தி இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.

ஒரு கவிஞனை விடுதலை செய்வதற்காக நாங்கள் குரல் கொடுத்தோமோ, அப்படி எங்களுடைய காணிகளை அபகரிக்கும் இந்த முப்படைகளுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தோமோ, அப்படியான ஒரு எழுச்சிமிக்க ஒரு குரலாக தமிழ் தேசம் மாற வேண்டும்.

ஆகவே, இந்த விடயத்திலே நாங்கள் அமைதி காக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்தாக இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படுகின்ற போது, வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் இவர்கள் மீது விசாரிக்கப்படுகின்ற சூழலை உருவாக்க வேண்டும்.

ஆகவே, இந்த விடயத்தில் தமிழ் தேசம் ஒற்றுமையாக, மிக எழுச்சியான ஒரு போராட்டத்தை தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலே விசாரிக்கப்படுகின்ற அத்தனை பேரும் உண்மையைக் கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும் என்ற ரீதியிலே நாங்கள் செயலாற்றுகின்ற போது, வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினை என்ற போர்வையில் எங்களை, எங்களுடைய இளைஞர்களைச் சித்திரவதை செய்து, இளைஞர்களை எரித்துச் சாம்பலாக்கிய இந்த மனித உரிமை மீறலாளர்கள் இதில் கண்டுபிடிக்க படுவார்கள் என்பது என்னுடைய கருத்து.

ஏற்கனவே நான் சொன்னது போல, துரிதமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த விசாரணைக்கு ஒரு தீர்க்கமான தீர்வை நீதிமன்றம் கொடுக்க வேண்டும். அதன் ஊடாக மனித உரிமை மீறல் சம்பந்தமாக இன்றைக்கு ஐ.நா சபை சொல்லுகின்ற விடயங்களில் சாட்சிகளாக இந்த விடயங்கள் எங்களுடைய பக்கம் வருகிற வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே, அரசாங்கம் கால தாமதம் செய்வதை சில விடயங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தாலும் கூட, இந்த விடயத்தை நான் வரவேற்கின்றேன். எதிரணியினர் தாங்களும் கைது செய்யப்படலாம்? என்ற ஒரு சந்தேகத்தில் இந்தக் கூக்குரலை இடுகிறார்கள். அது ஒரு அபாயக் குரலாகத் தான் நான் பார்க்கிறேன். அவர்கள் கூக்குரல் இடலாம். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

இந்தக் கூக்குரல் இடுபவர்களுக்குள்ளே இருப்பவர்களும் கைது செய்யப்பட வேண்டும். ஆகவே, நான் சொன்ன விடயம், தென்னிலங்கையிலே இப்படியான ஒரு கூக்குரல் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஒலிக்குமாக இருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் பிரதேசத்திலே, வடக்கு, கிழக்கில் மிக பாரிய அளவில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கை என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

Related Posts

மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்.!

மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்.!

by Mathavi
June 14, 2026
0

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்....

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கோடாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 14, 2026
0

மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பகஹவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
June 14, 2026
0

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையின் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் நோக்கில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (13) மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது....

2029 இல் நாமலே ஜனாதிபதி.!

2029 இல் நாமலே ஜனாதிபதி.!

by Mathavi
June 14, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டுள்ளார் என்றும், அவ்வாறு தன் இனத்தை நேசிக்கும் ஒருவராலேயே ஏனைய இனங்களையும் ஆதரிக்க முடியும்...

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

by Mathavi
June 14, 2026
0

புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல்...

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

by Mathavi
June 14, 2026
0

ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

by Mathavi
June 14, 2026
0

மாவத்தகம, பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது...

புதையல் தோண்டிய மூவர் கைது.!

தொலைத்தொடர்பு கோபுர கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 14, 2026
0

ராகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும்...

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக் கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு சமூகத்தின் முன்னால் உத்தமர்களைப் போல் வலம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி