• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வாக்குறுதியை மீறி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகம்!

selvan by selvan
June 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
வாக்குறுதியை மீறி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகம்!
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, இன்று அதே சட்டத்தைப் பயன்படுத்தி கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று மக்கள் போராட்ட முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசின் இந்த இரட்டை வேட அரசியலும், இனவாதத்தைக் கிளறிவிட்டு அரசியல் இலாபம் தேடும் சதித்திட்டங்களும் நாட்டை மீண்டும் ஒரு அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது என்றும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.

நுகேகொடவில் அமைந்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அதன் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாகப் பகிரங்கமாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது புதிய சட்டம் வரும் வரை அதனைப் பக்குவமாகப் பயன்படுத்துவதாகக் கூறி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கமைய, இளம் கலைஞர் ஒரு பாடலைப் பாடியமைக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாகக் கூறி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ஒரு கலைஞனைத் தண்டிப்பதற்கான போலியான முத்திரையாகும்.

தேர்தல் பிரசாரங்களின் போது, ஈழம் குறித்துப் பேசியவர்களால் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததென்றால், இன்று ஒரு கலைஞர் பாடும்போது அது பயங்கரவாதமாக மாறுவது ஏன்?

இதுவே இந்த அரசாங்கத்தின் தார்மீகமற்ற இரட்டை வேடமாகும்.” – என்று சாடினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெசாக் கூடு உடைப்புச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்தச் சம்பவம் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் இணைந்து செய்த காரியமல்ல.

சில இனவாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகும்.

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்பி, மீண்டும் ஒரு ‘கறுப்பு ஜூலையை’ உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடச் சிலர் துடிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் சங்கமே இந்தப் பழிசொற்களைப் பகிரங்கமாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தைப் போலவே, இன்றும் வன்முறைகளைத் தூண்டிவிட்டு அப்பாவி மக்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கச் சிலர் முயற்சிக்கின்றனர்.

இதற்குப் பலியாக வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

Related Posts

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

by Mathavi
June 17, 2026
0

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு தீவிரம்.!

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு தீவிரம்.!

by Mathavi
June 17, 2026
0

புதிய அரசமைப்பு என்ற பெயரில் 'ஏக்கிய ராஜ்ஜிய' (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்றும்,...

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “சிறு குற்றங்கள்” எனும் விழிப்புணர்வு கருத்தரங்கு.!

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “சிறு குற்றங்கள்” எனும் விழிப்புணர்வு கருத்தரங்கு.!

by Mathavi
June 17, 2026
0

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக "சிறு குற்றங்கள்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

19 துப்பாக்கிகள் மீட்பு; பிரதான சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 17, 2026
0

தெமட்டகொடை பகுதியில் கடந்த ஜூன் 3ஆம் திகதி 19 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஆணும் பெண்ணும் கதிர்காமம் பகுதியிலுள்ள...

டிக்கோயா நகரக் கழிவுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கொட்டப்படுவதால் மக்கள் பாதிப்பு.!

டிக்கோயா நகரக் கழிவுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கொட்டப்படுவதால் மக்கள் பாதிப்பு.!

by Mathavi
June 17, 2026
0

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பணியாளர்களினால் சேகரிக்கப்படும் நகரக் கழிவுகள், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடையில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள்...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; இருவர் கைது.!

by Mathavi
June 17, 2026
0

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து...

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 17, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி...

அரசு வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.!

அரசு வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.!

by Mathavi
June 17, 2026
0

அரசாங்கம் தேர்தல் காலத்தில் வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என வீட்டு வேலை பணியாளர்களின் உரிமைகளுக்காக செயல்படும் ப்ரோட்டெக்ட் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது....

எரிபொருள் விலை குறைப்பு உறுதி.!

எரிபொருள் விலை குறைப்பு உறுதி.!

by Mathavi
June 17, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே...

புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை.!

புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை.!

by Mathavi
June 17, 2026
0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி