• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நீதிமன்றத்தைப் பிழையாக வழி நடத்திய பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர்!

Bharathy by Bharathy
May 19, 2026
in இலங்கை செய்திகள்
0
நீதிமன்றத்தைப் பிழையாக வழி நடத்திய பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர்!
Share on FacebookShare on Twitter

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண ஆளுநரின் விசாரணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு எழுத்தாணை விண்ணப்ப வழக்குகளையும் நேற்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படவிருந்த விசாரணையை இரத்துச் செய்யக் கோரி கடந்த 27.04.2026 அன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்களின் ஆரம்பச் சமர்ப்பணங்களை ஏற்று மன்றால் இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி புவனேந்திரராஜா ஜனந்தன், கடந்த 11.05.2026 மற்றும் 13.05.2026 ஆகிய தினங்களில் வலுவான சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.

இவ்வாறான எழுத்தாணை வழக்குகள் அனுமதிக்கப்படுவது அரச இயந்திரத்தின் செயற்பாட்டை முடக்கும் எனவும், மக்கள் பிரதிநிதிகளே என்றாலும் அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வர வேண்டுமே தவிர, அவை விசாரணையின் முன்னரே தடுக்கப்படக்கூடாது எனவும் அவர் மன்றில் வாதிட்டார். அத்துடன் மனுதாரர் நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளமை தொடர்பிலும் அவர் தனது ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார். மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகி இடைக்காலத் தடைக் கட்டளையை நீடிக்கக் கோரி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.

நேற்று கட்டளையை வழங்கிய நீதிபதி, மனுதாரர்கள் மன்றை எவ்வாறு தவறாக வழிநடத்தினார்கள் என்பதைத் சுட்டிக்காட்டினார். ‘ஆளும் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இவ்விசாரணை தொடர்பான வர்த்தமானி பிரசுரிக்கப்படுவதற்கு முன்பாகவே அது பற்றி அறிந்திருந்து கருத்து வெளியிட்டார்’ என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், குறித்த விசாரணை தொடர்பான விடயம் வர்த்தமானியில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமையை மன்றில் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், மனுதாரர் மன்றைத் தவறாக வழிநடத்தியே குறித்த இடைக்கால நிவாரணத்தைக் கோரியிருந்தமை தொடர்பில் மன்று திருப்திப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி ஏற்கனவே மனுதாரருக்கு விசாரணை தொடர்பில் விடயங்களைக் குறிப்பிட்டு, சமூகமளிக்குமாறு கடிதம் அனுப்பியதன் ஊடாக அவருக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

சட்ட ஏற்பாடுகளின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நீதிமன்றம் தன்பொறுப்பில் எடுத்து விசாரணையை மன்றில் முன்னெடுக்க முடியாது எனவும், சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களும் உரிய பொறுப்புக்கூறலைக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் வலியுறுத்தினார். (அதேவேளை, ஒருவருக்கு எதிரானவர்களின் கருத்துக்களை மட்டும் உள்வாங்கி ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படுமாயின் அது ஆராயப்பட வேண்டிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்).

இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த  வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மன்றைப் பிழையாக வழிநடத்தியமை மற்றும் சட்ட ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டி, மனுதாரர்களால் பெறப்பட்ட இடைக்காலத் தடைக் கட்டளையை இரத்துச் செய்தது. அத்துடன் ஆளுநரின் விசாரணையை முன்னெடுப்பதற்குரிய அனுமதியை வழங்கி இரண்டு வழக்குகளையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Related Posts

இன்று முதல் வெள்ளி வரை கூடுகிறது நாடாளுமன்றம்!

இன்று முதல் வெள்ளி வரை கூடுகிறது நாடாளுமன்றம்!

by Bharathy
May 19, 2026
0

இன்று செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப....

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

by Bharathy
May 19, 2026
0

தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில்சந்தித்துப் பேசிய இலங்கை எம்.பி. அர்ச்சுனா!

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில்சந்தித்துப் பேசிய இலங்கை எம்.பி. அர்ச்சுனா!

by Bharathy
May 19, 2026
0

தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை...

வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம்!

வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம்!

by Bharathy
May 18, 2026
0

கண்டி மாவட்ட நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை பகுதியில் உள்ள வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்...

மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.

மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.

by Bharathy
May 18, 2026
0

இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நிiவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

குரலற்றவர்களின்  குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

by Bharathy
May 18, 2026
0

குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் முன்னெடுக்கப்பட்டது. 17 ம்...

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்!

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்!

by Bharathy
May 18, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு என்பது கடந்த கால வரலாற்று நினைவு தினம் மட்டுமல்ல,அது தமிழர்களின் எதிர்கால குறித்த பொறுப்பை தமிழர்களுக்கு உணர்த்தும் நாள் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர்...

சுகாதார சீர்கேட்டுடன் உள்ள கினிகத்தேன அரச பேருந்து நிலையம்!!

சுகாதார சீர்கேட்டுடன் உள்ள கினிகத்தேன அரச பேருந்து நிலையம்!!

by Bharathy
May 18, 2026
0

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கினிகத்தேன நகரில் பயணிகள் நலன் கருதி அமைக்க பட்ட அரச பேருந்து நிலையம் பாரிய அளவில் சுகாதார சீர் கேட்டுடன் உள்ளது....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

by Bharathy
May 18, 2026
0

தமிழின படுகொ*லை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில், இன்று (18.05.2026) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக...

கடந்த ஆறு மாதங்களாகக் கூடாரம் தான் வாழ்க்கை பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள்!

கடந்த ஆறு மாதங்களாகக் கூடாரம் தான் வாழ்க்கை பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள்!

by Bharathy
May 18, 2026
0

கடந்த 6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி