• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்!

Bharathy by Bharathy
May 18, 2026
in இலங்கை செய்திகள்
0
தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்!
Share on FacebookShare on Twitter

முள்ளிவாய்க்கால் நினைவு என்பது கடந்த கால வரலாற்று நினைவு தினம் மட்டுமல்ல,அது தமிழர்களின் எதிர்கால குறித்த பொறுப்பை தமிழர்களுக்கு உணர்த்தும் நாள் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது தமிழ் மக்கள் வெறுமனே ஒன்று கூடி நினைவஞ்சலி செலுத்தும் நாளாக மட்டும் கருதப்பட முடியாது. அது, இலங்கையின் வடகிழக்கு தமிழர் தாயகத்தின் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட  விடுதலைப் போராட்டத்தின் இறுதி நாள் மட்டுமல்ல அதுவே போராட்டத்தின் தொடர்ச்சியாகும்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது வடகிழக்கில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான து மட்டுமல்ல அந்த வடகிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டமாகவே அமைந்தது.   எனவே தமிழர்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பொறுப்பை தோலில் சுமக்க வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் அழியாத வலியையும், வெளிவராத உண்மைகளையும் தாங்கி நிற்கிறது.

 ஆயுதப் போராட்டம் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது? உலக நாடுகள் மற்றும் சர்வதேச அரசியல் சக்திகள் எந்த வகையில் அந்த போரின் முடிவை வடிவமைத்தனர்? போரின் இறுதிக்கட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் எவ்வாறு உயிரிழந்தனர்? போராளிகள் எவ்வாறு அழிக்கப்பட்டனர்? மக்கள் எத்தகைய மனிதாபிமான பேரழிவுகளை எதிர்கொண்டனர்? போன்ற பல்வேறு கேள்விகளுடன் இன்னமும் நீதிக்கான போராட்டங்கள் தொடர்கின்றன.தமிழ் மக்களின் அழிவுக்கு இது வரை யாரும் பொறுப்பு கூற முடியாத நிலையே காணப்படுகின்றது.

தமிழினம் தனது அரசியல் உரிமைகளையும் தேசிய அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வடிவங்களில் போராடி வந்துள்ளது. அந்தப் போராட்டம் வெறும் ஆயுதப் போராட்டமாக மட்டுப்படுத்தப்படவில்லை. கல்வி, சமூக முன்னேற்றம், விவசாயம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் தமிழர் சமூகத்தின் தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் இன்று, யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடகிழக்கு தமிழர் பிரதேசங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பல கிராமங்கள் இன்னமும் முழுமையான மறுசீரமைப்பைப் பெறவில்லை.

 வேலைவாய்ப்பின்மை, வறுமை, கல்வியில் பின்னடைவு, போதைப்பொருள் பரவல், இளைஞர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு, விவசாயம் மற்றும் மீனவர் சமூகங்களின் வாழ்வாதார சீரழிவு, பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் பொருளாதார சிக்கல்கள், மனநல பாதிப்புகள், காணிப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு சவால்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

குறிப்பாக, போருக்குப் பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் மிகப்பெரிய அளவில் உட்கட்டமைப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி மற்றும் சமூக அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில், தமிழ் மக்கள் இன்னமும் அடிப்படை தேவைகளுக்காக போராடும் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

 ஒரு காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தங்களது வருமானத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த மக்கள் இன்று வாழ்வாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நினைத்திருந்தால் கடந்த 17 ஆண்டுகளில் வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள் உட்கட்டமைப்பு, கல்வி, தொழில்நுட்பம், தொழில் முயற்சி, விவசாயம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்க முடியும்.

 போரின் அழிவுகளில் இருந்து மக்கள் வேகமாக மீண்டு எழுந்திருக்கலாம்.  ஆனால், போராட்ட காலத்தில் பெருமளவில் நிதி மற்றும் ஆதரவுகளை வழங்கிய புலம்பெயர் சமூகத்திலிருந்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக குறிப்பிட்ட சில உறவுகள் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 உண்மையில், அது போதுமானதாக இல்லை என்பதே வேதனையான உண்மை. எனவே, இன்று மிகவும் அவசியமானது கடந்த காலத்தை நினைத்து துயரப்படுவது மட்டுமல்ல; எதிர்காலத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதாகும்.

வடகிழக்கு தமிழ் மக்களின் மீளெழுச்சிக்காக கீழ்க்கண்ட விடயங்களில் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான முதலீடுகள் , இளைஞர்களுக்கான தொழில் மற்றும் தொழில் முயற்சி வாய்ப்புகள், விவசாயம், மீன்பிடி மற்றும் சிறு தொழில்துறைகளின் மறுசீரமைப்பு, பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கான பொருளாதார ஆதரவு, போதைப்பொருள் மற்றும் சமூக சீரழிவுகளுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகள், மனநல மற்றும் சமூக நல சேவைகளின் விரிவாக்கம், தமிழ் மொழி, கலை, பண்பாடு மற்றும் வரலாற்று அடையாளங்களின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் மற்றும் நீதி தொடர்பான ஒருங்கிணைந்த மக்கள் செயற்பாடுகள்

உலக தமிழர்களின் திட்டமிட்ட பொருளாதார மற்றும் அறிவுசார் பங்களிப்பு என்பவற்றில் புலம்பெயர் தமிழர்கள் தங்களது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.

முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு பல வரலாற்று பாடங்களை கற்பித்து சென்றுள்ளது.  கால துயரத்தை மட்டும் நினைவுகூர்வதற்கான நாளாக இருக்கக்கூடாது. அது, தமிழர் சமூகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக எதிர்காலத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை உலகத் தமிழர்கள் ஏற்கும் நாளாக மாற வேண்டும்.

அதனை தமிழர் தேசம் சர்வதேச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாற்ற வேண்டும்.முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது உலக அரங்கில் தமிழ் மக்களின் வரலாற்று உரிமைகளை, அரசியல் அதிகாரத்தை கோரி நிற்கும் நாளாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இந்த மே 18 நினைவு நாளில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து பொதுமக்களையும் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூருவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் மீளெழுச்சி, நீதி, மனித நேயம் மற்றும் தமிழர் சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும்  இந்த நாளில் வலியுறுத்தி நிற்கின்றேன் என தெரிவித்தார் .

Related Posts

வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம்!

வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம்!

by Bharathy
May 18, 2026
0

கண்டி மாவட்ட நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை பகுதியில் உள்ள வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்...

மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.

மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.

by Bharathy
May 18, 2026
0

இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நிiவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

குரலற்றவர்களின்  குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

by Bharathy
May 18, 2026
0

குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் முன்னெடுக்கப்பட்டது. 17 ம்...

சுகாதார சீர்கேட்டுடன் உள்ள கினிகத்தேன அரச பேருந்து நிலையம்!!

சுகாதார சீர்கேட்டுடன் உள்ள கினிகத்தேன அரச பேருந்து நிலையம்!!

by Bharathy
May 18, 2026
0

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கினிகத்தேன நகரில் பயணிகள் நலன் கருதி அமைக்க பட்ட அரச பேருந்து நிலையம் பாரிய அளவில் சுகாதார சீர் கேட்டுடன் உள்ளது....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

by Bharathy
May 18, 2026
0

தமிழின படுகொ*லை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில், இன்று (18.05.2026) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக...

கடந்த ஆறு மாதங்களாகக் கூடாரம் தான் வாழ்க்கை பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள்!

கடந்த ஆறு மாதங்களாகக் கூடாரம் தான் வாழ்க்கை பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள்!

by Bharathy
May 18, 2026
0

கடந்த 6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத்...

ஹட்டன் பிரதான வீதியில் வாகன விபத்தில் இரண்டு பேருந்துகள்  சேதமடைந்துள்ளன!

ஹட்டன் பிரதான வீதியில் வாகன விபத்தில் இரண்டு பேருந்துகள் சேதமடைந்துள்ளன!

by Bharathy
May 18, 2026
0

ஹட்டன் பிரதான வீதியில் நேற்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேருந்துகள் சிறியளவில் சேதமடைந்துள்ளன. இவ்விபத்து, இரண்டு பேருந்துகளும் ஒன்றுக்கொன்று முந்திச் செல்ல முயற்சித்த...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் அஞ்சலி!

by Bharathy
May 18, 2026
0

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை 18 ஆம் திகதி மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்...

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

by Bharathy
May 18, 2026
0

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில்  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியினரால்  இன்று மே 18 ஆம் திகதி கல்முனை மாநகரத்திற்கு...

அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது!!

அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது!!

by Bharathy
May 18, 2026
0

இலங்கையின் மூத்த ஆங்கில ஊடகவியலாளரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்ற செய்தி ஊடகத் துறையினரிடையே பெரும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி