தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று மே 18 ஆம் திகதி கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர் நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தமிழின அழிப்பின் போது மிஞ்சிய தமிழர்களின் உயிர்களை காப்பதற்காக உப்பில்லாத அரிசிகளை உபயோகித்து நீரை ஊற்றி அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டவையே முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும்.

Related Posts
ஹட்டன் பிரதான வீதியில் வாகன விபத்தில் இரண்டு பேருந்துகள் சேதமடைந்துள்ளன!
ஹட்டன் பிரதான வீதியில் நேற்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேருந்துகள் சிறியளவில் சேதமடைந்துள்ளன. இவ்விபத்து, இரண்டு பேருந்துகளும் ஒன்றுக்கொன்று முந்திச் செல்ல முயற்சித்த...
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை 18 ஆம் திகதி மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்...
அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது!!
இலங்கையின் மூத்த ஆங்கில ஊடகவியலாளரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்ற செய்தி ஊடகத் துறையினரிடையே பெரும்...
நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு..!!
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை,...
“கிழக்கின் ஊடக முதுசொம்” ஏ.எல்.எம். சலீமுக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு
கிழக்கின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ் - முஸ்லிம் உறவுகளின் இணைப்புப் பாலமுமாகத் திகழ்ந்த மறைந்த ஏ.எல்.எம். சலீமின் நினைவேந்தல் மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை...
ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!
மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ,கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. மன்னார் கள்ளிக் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த...
இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி மரணம்!
கண்டி, தெல்தெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெல்தெனிய, பம்பரகல கோயிலுக்கு அருகாமையில் உள்ள...
பேருந்துடன் உந்துருளி மோதி ; இளைஞர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!!
கடுவன, புவகஸ்சார பாலத்திற்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். கடுவன - புவகஸ்சார பிரதான வீதியில் பயணித்த...
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி!
ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச...
17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்குரிய நீதியும் தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை!
"முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை, அது கிடைக்க வேண்டும்,...










