• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பாதிக்கப்பட்ட மக்களை நாமே நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும்.!

Mathavi by Mathavi
May 13, 2026
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
பாதிக்கப்பட்ட மக்களை நாமே நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தை இன்று (13.05.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தத் திறப்பு விழா நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் அவர்களும் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார். வருகை தந்த அதிதிகள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, புதிய நிலையம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

சிறுவர்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோர் எனப் பல்வேறு தரப்பினரும் தமக்கான சேவைகளைப் பெறப் பல அரச அலுவலகங்களுக்கும், பல மேசைகளுக்கும் ஏறி இறங்க வேண்டியிருந்த சவாலான நிலைமையை மாற்றியமைக்கும் வகையிலேயே இந்த புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பல்வேறு நிறுவனங்களினூடாக வழங்கப்படும் சுமார் 60 வகையான சேவைகளை பாதிக்கப்பட்ட மக்கள் இனி ஒரேயிடத்தில் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

அரச திணைக்களங்களின் எல்லைகளைத் தாண்டி, மக்களின் தேவைகளை மையமாகக் கொண்டு இந்தச் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தமது துன்பக் கதைகளை ஒவ்வொரு அதிகாரியிடமும் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய நிலைமை இங்கு நீக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் மிகவும் உணர்திறனுடன் பதிவு செய்யப்படுகின்றன. தனிநபர்களை நம்பியிருந்த பின்தொடரல் நடவடிக்கைகள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த குழுவினரால் பயனாளிகள் முகாமைத்துவ முறைமையின் ஊடாகச் சேவைகள் டிஜிட்டல் முறையில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன. இது அரசாங்கம் குடிமக்களைச் சந்திக்கும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பாரிய நடைமுறைச் சீர்திருத்தமாகும்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், ‘இந்த நிலையம் வெறுமனே ஒரு கட்டடம் மட்டுமல்ல, எமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்பதற்கான ஒரு வாக்குறுதியாகும். பொதுமக்களின் தேவைகளை எங்களால் நேரடியாகப் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், அவர்களை உரிய திணைக்களங்களுக்குச் சரியான முறையில் வழிப்படுத்திவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர்களின் பக்கம் நின்று எங்கள் சேவைகளைச் செய்து, அவர்களின் வாழ்வில் ஒரு ஒளிக்கீற்றை ஏற்படுத்த வேண்டும். இந்த நிலையம் கருணையும் செயலும் ஒன்றிணையும் இடமாகவும், எமது மீளெழுச்சியை வலுப்படுத்தும் ஒரு மையமாகவும் அமையும்.

இந்த முன்னெடுப்பை நனவாக்குவதற்குத் தாராளமாக ஆதரவளித்த அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும், ஆசியா அறக்கட்டளையின் (ஏசியா பவுண்டேசன்) தொலைநோக்குச் சிந்தனைக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இங்கு வருகை தந்துள்ள உயர்ஸ்தானிகரை வடபகுதி மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கின்றேன். சமூக நீதி மற்றும் சமூக வலுவூட்டலை நோக்கிய நமது பயணத்தில் இன்னும் பல வெற்றிகரமான மைல்கற்களின் ஆரம்பமாக இந்தத் திறப்பு விழா அமையட்டும், எனத் தெரிவித்தார்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆர்.நிசாந்தன் அவர்களால் இந்த நிலையத்தின் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பில் அதிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபை, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சமூக சேவைகள் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம், ஏசியா பவுண்டேசன் ஆகியவற்றின் வலுவான பங்காண்மையின் அடையாளமாக இந்த நிலையம் திகழ்கிறது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஜொகான் ரொபேர்ட், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், உதவிப் பிரதம செயலாளர், சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர், பிரதேச செயலகப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

மருதங்கேணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

மருதங்கேணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 15, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளருக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர்...

மன்னார் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்.!

மன்னார் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்.!

by Mathavi
May 15, 2026
0

மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட...

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 14, 2026
0

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(14) பகல் நடைபெற்றது. யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்கான...

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது.!

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது.!

by Mathavi
May 14, 2026
0

இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது. இன்று அனைத்து துறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமாக முறையில்...

வரவுபிலவுக் குளத்தை விடுவித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.!

வரவுபிலவுக் குளத்தை விடுவித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.!

by Mathavi
May 14, 2026
0

தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட வரவுபிலவுக் குளத்தினை விடுவிப்புச் செய்வதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச் செய்து விவசாயிகளிடம் கையளிக்குமாறு வன்னிமாவட்ட...

மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம்.!

மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம்.!

by Mathavi
May 14, 2026
0

மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம் நேற்று புதன்கிழமை (13) மற்றும் இன்று வியாழக்கிழமை (14) ஆகிய இரு தினங்களும் மாலை வேளையில் மன்னாரில் உள்ள...

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 14, 2026
0

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்.!

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்.!

by Mathavi
May 14, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று மாலை தொடக்கம் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. மட்டக்களப்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு...

சஜித்தின் குழுவினரைத் தேடி அரசு மீன்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.!

சஜித்தின் குழுவினரைத் தேடி அரசு மீன்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.!

by Mathavi
May 14, 2026
0

தேசிய மக்கள் சக்தியின் 159 மலர்களும் வாடிவிட்டன. நாட்டை ஆளத் தகுதியானவர்கள் இல்லாததால், சஜித் பிரேமதாஸவின் குழுவினரைத் தேடி அரசு மீன்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்று ஐக்கிய...

மழையின் வீரியம் குறையும்.!

மழையின் வீரியம் குறையும்.!

by Mathavi
May 14, 2026
0

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான காலநிலை நாளை வெள்ளிக்கிழமை மாலை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி