• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது.!

Mathavi by Mathavi
May 14, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது.!
Share on FacebookShare on Twitter

இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது. இன்று அனைத்து துறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமாக முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டம் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின் ஒழுங்கமைப்பில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கிரேஸ்குமார் உட்பட திணைக்கள தலைவர்கள், பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் அவற்றினை விரைவுபடுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதேபோன்று முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் விசேடமாக பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கசிப்பு உற்பத்தி, சட்ட விரோத மண் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உட்பட நடைபெறும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன் இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதேபோன்று கொக்கட்டிச்சோலை நகரில் வீதி புனரமைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட நிறுவனம் முறையாக பணியை புனரமைப்பு செய்யாமல் பாரியளவில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடைசெய்யும் வகையிலான தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டது.

இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்வுகளும் வழங்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் சில பிரச்சினைகள் குறித்து விசேட கூட்டங்களை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு,
இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. நாங்கள் இந்த ஆட்சிப்பீடம் ஏறும் போது மக்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஒரு விடயம். இந்த நாட்டிலே இடம்பெற்றிருந்த ஊழல் மோசடிகளை இல்லாமச் செய்வதும், அதேநேரம் ஊழல் மோசடிகளோட சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என்பதிலே அவர்கள் எங்களுக்காக வாக்களித்திருந்தார்கள். அந்த கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்கள்.

ஆகவே எங்களது கொள்கையிலேயும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். ஊழல் மோசடியற்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம் என்பதை. அந்த அடிப்படையிலே நாங்கள் அந்த விடயத்தை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூடுதலான தரப்பினர்களுக்கு எதிராக ஊழல் மோசடிகளோட சம்பந்தப்பட்ட பல வழக்குகள் இப்போது முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்காய் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.

முன்னாள் அமைச்சர்கள் அது மாத்திரம் கிடையாது ஜனாதிபதிகளுக்கு கூட எதிராக இப்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை அனைத்துக்குமே எதிர்க்கட்சியினர் அரசியல் சாயம் பூச முற்படுகின்ற அதேவேளை இது ஒரு அரசியல் பழிவாங்கல் என மக்கள் மத்தியிலே அவர்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இது எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் கிடையாது. இந்த நாட்டிலே இடம்பெற்ற மோசடிகளை விசாரணைப்படுத்தும் போது அது தொடர்பாக செயற்பட்டவர்களாக இந்த முன்னாள் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் அதோடு ஒத்ததாக இன்று ஜனாதிபதிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறதை அறியக்கூடியதாக இருக்கின்றது. கடந்த காலங்களில் தாங்கள் உழைத்துக்கொள்வதற்காக தங்களது அரசியல் செயற்பாட்டுக்காகவும் தங்களது குடும்பங்களை வளர்த்துக் கொள்வதற்காகவும் இந்த மோசமான செயற்பாடுகளை இந்த நாட்டை வீழ்த்துகின்ற இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்கின்ற விதமான பல விடயங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். அது சட்டரீதியாக இப்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. எங்களது காலகட்டத்திலே நாங்கள் சுயாதீனமாக இயங்குவதற்காக அனைத்து துறைகளையும் உட்படுத்தி இருக்கின்றோம். உங்களுக்குத் தெரியும் பொலிஸ் துறை இன்று சுயாதீனமாக செயல்படுகின்றது, அதனைப் போன்று நீதித்துறையும் இன்று சுயாதீனமாக செயல்படுகின்றது.

இவை அனைத்தையும் விசாரணை செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டனைகளை வழங்குவதற்கான விடயங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இதிலே எயார்பஸ் மோசடி தொடர்பான ஒரு விடயம் தற்போது பேசுபொருளாக இருக்கின்றது. அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் போது அதன் பின்புலத்திலே ராஜபக்சக்கள் விஷயமாக மகிந்த ராஜபக்ச பின்னணி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே அது தொடர்பான விசாரணைகளுக்காக அவரை அழைத்திருந்தார்களே தவிர அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தான் அவரை அழைத்திருந்தார்கள் அதாவது சொல்லப்போனால் அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக அவரை அழைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டிவந்த தரப்பினர் அல்லது அவர் ஆதரவாளர்கள் என குறிப்பிட்ட தரப்பினை கூட்டிக்கொண்டு வந்து அவர்கள் ஏதோ வாழ்த்துக்களையும் கூறி அவரை புகழ்ந்து கொண்டு அந்த விடயத்தை செய்திருக்கின்றார்கள்.

சாதாரணமாக ஒருவர் தவறில் ஈடுபடும் போது அல்லது ஒரு குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் போது அவர் தொடர்பான விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆகவே அந்த இடத்திலேயே அவர்கள் நேரடியாகச் சென்று தங்களது வாக்குமூலத்தை வழங்குவார்கள். இது சாதாரணமான ஒரு விசாரணை நடைமுறை, இது தான் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதற்குச் செல்லுவதற்குக் கூட அவர்கள் பயப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

இங்கே எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூடுதலான தரப்பினர் நான் சொன்னது போன்று எல்லாவிதமான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்களாகவும் விஷயமாக இந்த மோசடிகளோட சம்பந்தப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகவே சட்டம் அனைவருக்கும் சமன் என்ற அடிப்படையிலே நாங்கள் செயல்படுகின்றோம். அது பெரியவராக இருந்தாலும் சரி சிறியவராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சட்டம் சமனாக செயல்படுகின்றது.

Related Posts

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

by selvan
June 9, 2026
0

"அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்....

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

by selvan
June 9, 2026
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து 128...

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

by selvan
June 9, 2026
0

"அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக...

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

by selvan
June 9, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி