• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து!

Bharathy by Bharathy
May 11, 2026
in இலங்கை செய்திகள்
0
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து!
Share on FacebookShare on Twitter

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவக்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி  ஈழத்தமிழர் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இன்று தனது வடமராட்சி அலுவலகத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரங்களும் வருமாறு.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் இணைந்து அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாகவும் ஈழத் தமிழர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியத் திரையுலக வரலாற்றில், 1977-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு, ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து நேரடியாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்பது இதுவே முதன்முறையாகும். அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் 30.4% வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது விஜய் அவர்கள் 38% வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர் விவகாரத்தில் எதிர்பார்ப்பு கடந்த 2013-ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழகச் சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக ஒரு முக்கியத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

 இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், இதற்குச் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

அதே போன்று, தற்போது பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள், ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கான அழுத்தங்களை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையேயான சிக்கல்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வாழ்வாதாரப் பாதுகாப்பு: இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பிரச்சனைகளால் ஈழத்து மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் வள அழிப்பு: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன. சொத்து சேதம்: தொடர்ச்சியான மோதல்களால் மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைகின்றன.

எத்தனை ஆட்சியாளர்கள் மாறினாலும் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனைக்கு, புதிய முதலமைச்சர் அவர்கள் ஒரு நிரந்தரமான மற்றும் சுமூகமான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி  மீனவ அமைப்புகள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

by selvan
June 1, 2026
0

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்....

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மாலை 5 30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில்...

திருக்கேதீஸ்வரர் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின்   தீர்த்தத் திருவிழா இன்று

திருக்கேதீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று

by selvan
May 30, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

by selvan
May 29, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இந்த...

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

by selvan
May 29, 2026
0

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களைத் தேடும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் இடம்பெற்றன....

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

by selvan
May 26, 2026
0

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36 உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..தமக்கு எவ்வித முன்னறிவித்தலும்...

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

by selvan
May 26, 2026
0

மத்திய மலைநாட்டில் நுவரேலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக  நுவரேலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்பு!

by selvan
May 23, 2026
0

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.தமிழகம் இராமேஸ்வரம்...

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்

by selvan
May 23, 2026
0

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி