• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி..!

Bharathy by Bharathy
May 1, 2026
in இலங்கை செய்திகள்
0
மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி..!
Share on FacebookShare on Twitter

மலையக ஊழியர் சங்கத்தின் ஸதாபகத் தலைவர் ஜெயம் கண்ணா, விஸ்வநாதன்  தலைமையில் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனின் வழிநடத்தலில் பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 

தமிழர் பாரம்பரிய தப்பு வாத்தியம் முழங்க மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி மடுலசீமை சந்தியில் இருந்து பசறை பிரதேச சபை மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர் இதன் போது மூத்த முன்னோடி தொழிற்சங்கவாதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கபைபடைடனர். 

சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகிக்க வருகை தந்த அனைவரும் பின்வரும்  உறுதிப்பாட்டை சத்தியபிரமாணமாக எடுத்துக் கொண்டனர்.

“இன்று உலகத் தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி, மலையகத் தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து, [சங்கத்தின் பெயர்] ஆகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பின்வரும் சத்தியப்பிரமாணத்தைச் செய்கின்றோம்:

1. உரிமைகளுக்காக உறுதியுடன் நிற்றல்

எமது வியர்வையினாலும் உழைப்பினாலும் இந்த நாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கின்றது என்பதை பெருமையுடன் பிரகடனப்படுத்துகிறோம். எமது நியாயமான ஊதிய உயர்வு, தொழில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் வரை நாம் சோர்வின்றித் தொடர்ந்து போராடுவோம் என உறுதி கூறுகிறோம்.

2. ஒற்றுமையே எமது பலம்

இனம், மதம், சாதி மற்றும் அரசியல் பேதங்களைக் கடந்து, தொழிலாளர்கள் என்ற ரீதியில் எமது சங்கத்தின் கீழ் ஒருமித்த கருத்துடன் செயற்படுவோம். தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையைச் சிதைக்க முற்படும் எந்தவொரு சக்திகளுக்கும் நாம் இடமளிக்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கிறோம்.

3. கௌரவமான வாழ்வாதாரம்

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் உழைக்கும் எமது மக்களுக்கு முறையான வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் காணி உரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எமது அடுத்த தலைமுறை ஒரு கௌரவமான சமூகமாகத் தலைநிமிர நாம் அடித்தளம் அமைப்போம்.

4. சுரண்டலுக்கு எதிரான குரல்

தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுவதற்கும், வேலைத்தளங்களில் நடக்கும் அநீதிகளுக்கும் எதிராக நாம் எப்போதும் ஓங்கி ஒலிக்கும் குரலாகத் திகழ்வோம். நிர்வாகத்தினதும், அரசினதும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது எமது உரிமைகளை மீட்டெடுப்போம்.

5. தியாகிகளுக்கு அஞ்சலி

மலையக மண்ணில் தொழிலாளர் உரிமைகளுக்காகத் தம்முயிரைத் தியாகம் செய்த எமது முன்னோர்களின் கனவுகளை நனவாக்க, அவர்களின் போராட்ட வழியில் நின்று சங்கத்தின் இலக்குகளை வென்றெடுப்போம் என இப்புனிதமான மே தினத்தில் உறுதி ஏற்கின்றோம்.

உறுதி எடுத்தலைத் தொடர்ந்து நிர்வாகசபை உறுப்பினர்களின் உரைகளும் இடையிடையே கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஜெயம்,சுந்தரேசன், கருப்பையா ,  ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனின் உரை ஊவா மாகாண, பதுளை மாவட்ட, பசறை பிரதேசம் என மாகாண மட்டத்தில் இருந்து பிரதேச சபை வரை மலையகத் தமிழர்களுக்கும் , தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், சவால்கள் குறித்து எடுத்துரைப்பதாக அமைந்தது. கூடவே மலையக இளைஞர்களை ஏமாற்றும் தலைமைகளுக்கு மாற்றாக தாமே இப்போது தலைமை ஏற்று செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா ‘ நில உரிமையே நிஜ உரிமை’ எனும் தொனிப் பொருளை அடியொற்றி ” கூலியா? காணியா?”  எனும் தலைப்பில் உரையாற்றினார். 

கடந்த 200 ஆண்டுகளாக கூலி களாகவே மலையகத் தோட்டத் தொழிலாளர்களை வைக்க நினைக்கும் இலங்கை அரசும் அதிகார வர்க்கமும் கூலி உயர்வு கொடுக்கிறோம் எனும் பெயரில்  தொடர்ந்து அடிமையாக வைக்கவே எண்ணுகின்றனர். நாம் புதிய கிராமங்களை உருவாக்க அதிகார சபை உருவாக்கினால் அதனை கலைக்கவே முயற்சிக்கின்றனர்.

பிரதேச செயலகங்களை உருவாக்கினால் அதனை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இப்போதைய அரசாங்கத்துக்கு இரண்டு பொறுப்புகள் உண்டு முழு நாட்டையும் ‘வளமான நாடு அழகான வாழ்க்கையை அமைப்பது’ அவர்களுடைய 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி. ஆனால் 2023 ஆம் ஆண்டே மலையக மக்களுக்கு என ஹட்டன் பிரகடனத்தை வெளியிட்டு அதன்படி 5 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.அதில் மலையக மக்களின் காணிரஸ உரிமை, நிர்வாக உரிமை உறுதி செய்யப்படும் என கூறியுள்ளார்கள்.

இப்போது 1750/= நாட்கூலியை மாத்திரம் கொடுத்துவிட்டு காணி, பொது நிர்வாக, அதிகார சபை உரிமைகளை மழுங்கடிக்க பார்க்கின்றனர்.   எனவே நாட்டை வளமாக்க முயற்சிப்பது போலவே மலையக மக்களின் காணி உரிமை உள்ளிட்ட பிற அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட முன் வர வேண்டும் . அல்லாதவிடத்து இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்க நேரிடும்.

எனவே கூலி அடையாளத்தை  விட்டெறிந்து கெளரவமான மக்களாக வாழ காணி உரிமையை நிலைநாட்ட உழைபைபோம். தென்பகுதி சிங்கள மக்களை போல மலையகத் தமிழ் மக்களையும் சிறு தோட்ட உடமையாக்கு என உரத்துச் சொல்வோம்.

இதன் மூலம் அடிமைக்கூலி முறை துரைத்தன  அடக்குமுறை தோட்ட நிர்வாக முறை அனைத்தில் இருந்தும் வெளியே வர முடியும். அதே நேரம் அர்த்தமுள்ள பிரஜைகளாக வாழ முடியும் எனவும் தெரிவித்தார்.

Related Posts

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

by Bharathy
May 8, 2026
0

வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம்...

மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டு போட்டி- 2026!

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி- 2026!

by Bharathy
May 8, 2026
0

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின்...

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

by Bharathy
May 8, 2026
0

யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய...

அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு …!

அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு …!

by Bharathy
May 8, 2026
0

அக்கரையங்குளம் காவல் எல்லைக்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2026.05.07 அன்று ஜெயப்புரம் காவல் நிலையத்தில் ஹலோ...

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்!

கரவெட்டி மக்கள் எதிர்நோக்கும் நீர் வடிந்தோடல் சிக்கல்; விரைவில் தீர்வு காண நடவடிக்கை..!

by Bharathy
May 8, 2026
0

கரவெட்டி மத்திய பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வடிகால் அமைப்பு மற்றும் வீதிப் புனரமைப்புப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவுள்ளதாகத் NPP யின் கரவெட்டி பிரதேச சபை...

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

by Bharathy
May 8, 2026
0

மத்திய மலைநாட்டில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலப்பிட்டி நகரில் நாவலப்பிட்டி கம்பளை வீதியிலும் பேருந்து நிலைய பகுதியில் அடிக்கடி நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில...

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

by Bharathy
May 8, 2026
0

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வியட்நாம்...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை!

by Bharathy
May 8, 2026
0

பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதாகினர். அவரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

வடக்கில் தற்காலிக ஊழியர்களைநிரந்தரமாக்க ஆளுநர் உத்தரவு!

வடக்கில் தற்காலிக ஊழியர்களைநிரந்தரமாக்க ஆளுநர் உத்தரவு!

by Bharathy
May 8, 2026
0

அரச திணைக்களங்களில் பல ஆண்டுகளாக தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில்...

3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது!

3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது!

by Bharathy
May 8, 2026
0

அரியாலை செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணியின் 11வது நாளான இன்று மே 08 ஆம் திகதி 3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி