• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

எமது வர்த்தக அடையாளத்தை பாதுகாக்க ஒத்துழையுங்கள்.!

Mathavi by Mathavi
February 25, 2026
in இலங்கை செய்திகள்.
0
எமது வர்த்தக அடையாளத்தை பாதுகாக்க ஒத்துழையுங்கள்.!
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களை பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உள்ளூர் உற்பத்திகளை ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, ஏற்கனவே அங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள இத்தகைய போலி உற்பத்திகள் எமது மாகாணத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாக அமையும் என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியூமன் ஆகியோர், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இச்சந்திப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றதுடன், இதில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

இதன்போது, இலங்கைக்கும் பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து இரு நாட்டுத் தூதுவர்களும் ஆளுநருடன் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தென்னிலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாவிகளை எவ்வாறு வடக்கு நோக்கி ஈர்ப்பது என்பது தொடர்பில் தூதுவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் விரிவான விளக்கமளித்தார்.

வடக்கு மற்றும் தெற்குக்கு இடையிலான பயண நேரம் அதிகமாகக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய தூதுவர்கள், பயண நேரத்தைக் குறைப்பதன் மூலமே சுற்றுலாவிகளை வடக்குக்கு அதிகளவில் ஈர்க்க முடியும் எனக் குறிப்பிட்டதோடு, அதற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஏதும் உள்ளனவா எனவும் வினவினர்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், போக்குவரத்து உட்கட்டமைப்பு மேம்பாடுகள், உள்ளூர் விமான சேவைகள் மற்றும் மாகாணத்தின் எதிர்காலச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

மேலும், வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகின்றது என்பது குறித்தும், மாகாண சபைத் தேர்தல்கள் குறித்தும் தூதுவர்கள் கேட்டறிந்தனர்.

புலம்பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதற்கான வழிமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளனவா என்று தூதுவர்கள் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த ஆளுநர், “தற்போதைய அரசு முதலீடுகளைப் பெரிதும் ஊக்குவிக்கின்றது. அதற்கான சகல வழிகளும் திறக்கப்பட்டுள்ளன. எனவே, புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வித தயக்கமுமின்றி தங்களது முதலீட்டு முயற்சிகளில் ஈடுபட முடியும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தூதுவர்களுக்கு எடுத்துரைத்தார்.

வடக்கு மாகாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

இந்த வருடத்துக்கான தங்களது தேசிய திட்டங்களில் வடக்கு மாகாணத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், குறிப்பாக பிரான்ஸ் அரசு வடக்கிலுள்ள சிறுவர் மற்றும் பெண்களின் முன்னேற்றம் தொடர்பில் அதீத அக்கறை செலுத்துவதாகவும் தூதுவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசுகளின் அனுசரணையில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் அவர்கள் கேட்டறிந்ததுடன், அத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆளுநர் அவர்களுக்கு விளக்கமளித்தார்.

Related Posts

யாழில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு.!

யாழில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு.!

by Mathavi
May 17, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு - கிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

குடும்பத் தகராறில் தம்பியை கொ*லை செய்த அண்ணன்.!

by Mathavi
May 17, 2026
0

கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றின் போது, அண்ணன் தனது தம்பியை வாளால் வெட்டிப் படு கொலை செய்துள்ளார். நேற்று சனிக்கிழமை கந்தானை பகுதியில்...

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
May 17, 2026
0

தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் திருக்கோவில் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில்...

போதைப்பொருட்கள் விற்பனை; இருவர் கைது.!

போதைப்பொருட்கள் விற்பனை; இருவர் கைது.!

by Mathavi
May 17, 2026
0

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர்...

உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

பாரவூர்தி மோதி பௌத்த தேரர் உயிரிழப்பு.!

by Mathavi
May 17, 2026
0

பேராதனை - ரஜவத்தை வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பௌத்த தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனையிலிருந்து கண்டி நோக்கி...

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

by Mathavi
May 17, 2026
0

பொகவந்தலாவையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார்...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

சட்டவிரோத உந்துருளிகளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 17, 2026
0

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 02 உந்துருளிகளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த...

மஹிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம்.!

மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து; பதறுகின்றார் மனோஜ் கமகே.!

by Mathavi
May 17, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குத் தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்." -...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 17, 2026
0

கொழும்பு, ஹோமாகம, பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை...

அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும்.!

அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும்.!

by Mathavi
May 17, 2026
0

"அநுர அரசிடம் முறையான பொருளாதாரத் திட்டங்கள் இல்லாததால் நாட்டு மக்கள் மிக வேகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி