2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதலாவது போட்டியை இன்று (08) அயர்லாந்து அணிக்கு எதிராக நடத்துகிறது.இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணத் தொடரின் சில போட்டிகள் இலங்கையில் உள்ள கொழும்பு எஸ்.எஸ்.சி., ஆர். பிரேமதாச மற்றும் கண்டி பல்லேகல மைதானங்களில் நடைபெறவுள்ளன.
மேலும், இந்தியாவின் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இம்முறை உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமையிலுள்ளார். அணியில் பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷண, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.இலங்கை அணி ‘B’ பிரிவில் போட்டியிடுகிறது. இப்பிரிவில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான் மற்றும் சிம்பாப்வே அணிகளும் அடங்குகின்றன.உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் நோக்கில் இலங்கை அணி இன்று களமிறங்குகிறது.










