ஒரு சில சொற்களை கொண்டு கருத்தின் தொன்மைக்கு அழைக்கும் கவிதை பாணி தனிப்பட்ட அளவில் எனக்கு அதிகம் பிடிக்கும்.
சொற்களை, கருத்துக்களை அடுக்காமல் ஒரே புள்ளியில் நெத்தியடியாக கூறும் கவிதை பாணியே கைக்கூ கவிதைகளாகும். அந்த முறையில் ஐயா கையாண்டு இருப்பது மேலும் சிறப்பு.
இந்நூலில் எல்லா கவிதைகளும் சிறப்பாக அமைந்திருப்பதால் நான் சுருக்காமாக நூலை பற்றி பேசுகிறேன். ஏனெனில் கவிதைகளை வாசித்தால் அவை நூலை பற்றி வாசகருக்கு தெளிவாக உணர வைக்கும்.
சில கவிதைகளாக………..
சோரம் என்ற தலைப்பில்
“குடும்ப பாரம்
இதனால் போனாள்
சோரம்”
சிறை என்ற தலைப்பில்
“அரைகுறை
குற்றவாளி
முழுக் குற்றவாளியாகும்
பல்கலைக்கழகம்”
சிகரெட் என்ற தலைப்பில்
“ஊதும் போதே
சாம்பலாகி
சாம்பலாவாய் என
எச்சரிப்பது”
எதிரி என்ற தலைப்பில்
“உன்னை சதா
அவனை பற்றியே
சிந்திக்க வைப்பவன்”
பௌத்தம் என்ற தலைப்பில்
“ஆமையை கொன்றால்
தண்டனை
தமிழனை கொன்றால்
தர்மம்”
எழுத்தாளன் என்ற தலைப்பில்
“ஏனையோருக்கு அறிவுரை
வழங்க மட்டும்
தெரிந்தவன்”
ஆட்சி என்ற தலைப்பில்
“பருவத்திற்கு பருவம்
பழம் தேடும்
பட்சி”
ஐயாவினுடைய கவிதைகள் ஒற்றை வரிகளே ஆனாலும் எம்மை பல மடங்கு சிந்திக்க வைக்கின்ற சிந்தனை ஊற்றாக்கவே தெரிகிறது.
2005 ஆம் ஆண்டு முதற்பதிப்பு இடம்பெற்றிருந்தாலும் இன்னும் சற்றுகூட மூச்சு அடங்காமல் திமிராகவே நிறுக்கிறது. குட்டிக் கவிதைகளின் ஆழத்தை விரும்பும் என்போன்றவர்கள் இவரின் நூல்களை வாசிப்பது பெரும் உத்வேகத்தை தரும்.
நூல் :- அகராதி கவிதைகள்
எழுத்தாளர் :- வ. மா. குலேந்திரன்
விலை :- 75 ரூபா.
விமர்சகர்
எழுத்தாளர்
-ஆதன் குணா –












