நூல் :-ஈழத்தமிழர் வரலாறு
எழுத்தாளர் :- வன்னியூர் செந்தூரன்
விலை :-ரூபாய். 1500
அண்மையில் வெளிவந்த ஈழத்தமிழர் நூலானது வன்னியூர் செந்தூரன் அவர்களுடைய நீண்ட கால உழைப்பாகவே வெளிப்படுகிறது. ஈழத்து எழுத்தாளர்களுடைய தமிழினம் சார்ந்த படைப்புக்கள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் மாற்றம் காணவே செய்கிறது.
நீண்ட காலமாக வரலாற்றைத் தேடிய செந்தூரன் அவர்களுடைய இந்தப் படைப்பு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என்றால் அது மறுக்க முடியாத உண்மைதான்.
ஈழத்தில் தமிழர்களுடைய இருப்பின் மீது பல இனக்கூட்டமும் பல நாடுகளும் கல்லெரிந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நெருக்கடிகளை தாண்டி எமது இருப்பினை நாம் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
ஆயுத போராட்ட வழியிலும் அரசியல் வழியிலும் எமது இனத்திற்கான காப்பரன்களை நாங்கள் வடிவமைத்துக் கொண்டேதான் இருந்தோம். தற்போதும் இருக்குறோம்.
இவ்வாறான தமிழர்களின் ஈழத் தேசத்தின் பூர்விக வரலாற்று சான்றுகள் பல இருக்கிறது. அவைகளில் சில முரண்பாடுடையவையாக இருந்தாலும் தற்போது இந்நூலானது அதற்கு பதில் சொல்வதாகவே அமைந்திருக்கிறது. இந்நூலினை விளக்கி கூறுவது பரப்பு அதிகம் என்பதால் மிக மிக சுருக்கமாக கூற விளைகிறேன்.
அறிவியலாளர்கள், புவியியலார்கள் கூறுகின்ற இந்தியா கண்டத்தோடு இணைந்த பஞ்சியாக் கண்டம் இருந்தது உண்மை. அது குமரிக் கண்டம் எனும் பெயர் கொண்டு இருந்தது. இருப்பினும் பிற்பட்ட காலகட்டத்தில் கடலின் சீற்றத்தால் அவை கடலில் மூழ்கிவிட்டதோடு எஞ்சிய பகுதியே இன்று காணப்படும் லிங்க நாடு எனும் இலங்கையாகும்.
குமரிக் கண்டப்பரப்பில் வாழ்ந்த தமிழர்களே இங்கு பூர்விக தமிழர்களாக இன்றும் இலங்கையில் வாழ்கின்றார்கள். போகர் முனிவருடைய எழுத்துக்கள் மூலம் கூறுவோம்மானால் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது புலனாகிறது.
தொடர்ந்து இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரண்டு தெய்வ வழிபாட்டினைக் கொண்டிருந்தார்கள். லிங்க வழிபாட்டை கொண்டவர்கள் இயக்கர் என்றும் பாம்பினை வழிபடுபவர்கள் நாகர்கள் என்றும் தமிழர்களே பிரிந்து வாழ்ந்தார்கள். அந்த வம்சாவழி வந்த தமிழச்சியே குவேனியாகும்.
தொடர்ந்து வன்னி இராச்சியமானது அடங்காபற்று இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது. இதன் பின்பு வட இந்தியப் பகுதியில் இருந்து வந்த ஆரிய, திராவிடர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சமஸ்கிருதம், சாதிய முறைகளை இங்குள்ள தமிழர்களிடம் பின்பற்ற செய்கிறார்கள்.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்றவர்கள் எதிர்த்தும் தோற்க்காத வன்னி இராச்சியம் ஆங்கிலேயர்களால் 1803இல் தோற்கடிக்கப்பட்டதாக பல வரலாற்று சான்றாதாரங்களோடு எடுத்தியம்புகிறார் நூலாசிரியர்.
நீண்ட நெடிய வரலாற்று தேடலினை ஒரு சில வரிகள் மூலம் கூறுவது கடினம். இருந்தும் மேலோட்டமாக ஈழத்து தமிழர் வரலாறு நூலினை தொட்டு செல்கிறேன்.
தமிழர் வரலாறுகளை பறை சாற்றும் நூல்கள் வருவது அரிது. இருந்தும் இந்நூலினை அவசியம் ஈழத்தமிழர்கள் தவறாது படித்து தெளிவு பெற வேண்டும் என்பது எனது அன்பான எண்ணம். வாசகர்கள் படித்து பயன் பெறுவதே ஒரு நூலுக்கான பெரும் அங்கீகாரமாகும்.
நன்றி.
எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –












