ஜோர்ஜியாவில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் பட்டம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் சக நாட்டைச் சேர்ந்த கோனேரு ஹம்பியை தோற்கடித்துள்ளார்.
இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அவர் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றது குறித்து திவ்யா தேஷ்முக் கருத்துத் தெரிவிக்கையில், “வெற்றி பெறுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இந்தப் போட்டிக்காக என்னை நன்றாக தயார்படுத்திக் கொண்டேன்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நான் பட்டம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பலம் வாய்ந்த வீராங்கனைகளுடன் மோதினேன். உலகத் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ள ஹம்பியை வீழ்த்தி பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். எனது சாதனைப் பயணம் தொடரும். இது வெறும் தொடக்கம் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.










