1975
யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
1983
கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
1816
நேக்ரோ கோட்டை (இன்றைய புளோரிடாவில்) சமரில் அமெரிக்கக் கடற்படை பீரங்கிக் குண்டு ஒன்றை ஏவியதில் 275 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்க வரலாற்றில் ஒரேயொரு பீரங்கி வெடிப்பில் அதிகளவு இழப்புகள் நேர்ந்த நிகழ்வாகும்.
1862
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த “கோல்டன் கேட்” என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் உயிரிழந்தனர்.
1880
இரண்டாவது ஆங்கில – ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் பிரித்தானியரை வென்றனர்.
1890
டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ தன்னைத்தானே சுட்டு, இரண்டு நாட்களின் பின்னர் இறந்தார்.
1919
சிகாகோவில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 38 பேர் உயிரிழந்தனர், 537 பேர் காயமடைந்தனர்.
1921
இன்சுலின் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
1929
போர்க்கைதிகள் தொடர்பான ஜெனீவா உடன்பாட்டில் 53 நாடுகள் கையெழுத்திட்டன.
1942
இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகள் எகிப்தில் அச்சு நாடுகளின் இறுதி முன்னகர்வை வெற்றிகரமாகத் தடுத்தன.
1953
கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.
1955
ஆஸ்திரியாவில் 1945 மே முதல் நிலை கொண்டிருந்த நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.
1955
இலண்டனில் இருந்து இஸ்தான்புல் சென்று கொண்டிருந்த ‘எல் அல்’ விமானம் பல்கேரியாவின் வான் பரப்பில் இரண்டு போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், 58 பேர் உயிரிழந்தனர்.
1955
மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964
வியட்நாம் போர்: அமெரிக்கா மேலும் 5,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமிற்கு அனுப்பியது.
1981
மெக்சிக்கோவில் டிசி-9 ரக விமானம் ஒன்று தரையிறங்குகையில், ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 66 பேரில் 32 பேர் உயிரிழந்தனர்.
1989
கொரிய விமானம் திரிப்பொலி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதியதில் விமானத்தில் இருந்த 199 பேரில் 75 பேரும் தரையில் நால்வரும் உயிரிழந்தனர்.
1990
பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990
திரினிடாட் டொபாகோவில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
1996
அமெரிக்கா, அட்லான்டாவில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது குண்டு ஒன்று வெடித்தது.
1997
அல்சீரியாவில் “சி செரூக்” என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2002
உக்ரைனின் லிவீவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது சுகோய் எஸ்.யு-27 போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.
2015
இந்திய பஞ்சாப் பகுதியில் குருதாசுபூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
















