1848
மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.
1848
கொழும்பு, பொரளையில் வரி விதிப்புக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது.
1957
இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1803
உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
1814
சுவீடன் – நோர்வே போர் ஆரம்பமானது.
1847
லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1891
தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.
1892
பிரித்தானியாவின் முதலாவது இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தாதாபாய் நௌரோஜி தேர்தெடுக்கப்பட்டார்.
1897
பசுத்தூன் பக்கிரி சைதுல்லா தலைமையில் 10,000 வீரரகள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1899
டொமினிக்கன் குடியரசின் 27 ஆவது அரசுத்தலைவர் யூலிசசு இயூரோ படுகொலை செய்யப்பட்டார்.
1936
ஜேர்மனியும் இத்தாலியும் பிரான்சிஸ்கோ பிராங்கோவிற்கு ஆதரவாக எஸ்ப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.
1941
இரண்டாம் உலகப் போர்: பிரெஞ்சு இந்தோசீனாவை ஜப்பானியர் ஆக்கிரமித்ததை அடுத்து, அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகியன ஜப்பானியரின் அனைத்து சொத்துகளையும் முடக்கினர்.
1944
இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் மேற்கு உக்ரைனின் லிவீவ் நகரில் நுழைந்து அதனை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின. நகரின் 160.000 யூதர்களில் 300 பேர் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தனர்.
1945
ஐக்கிய இராச்சியத்தில் நடந்த பொதுத் தேர்தல்களில் தொழிற்கட்சி பெரும் வெற்றி பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார்.
1945
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படையினரைச் சரணடையக் கோரும் உடன்படிக்கையில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியன ஜேர்மனியில் பொட்சுடாம் நகரில் கையெழுத்திடப்பட்டன.
1945
இரண்டாம் உலகப் போர்: இரோசிமாவில் போடப்படவிருந்த லிட்டில் பாய் அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தினியான் தீவை அடைந்தது.
1947
பனிப்போர்: நடுவண் ஒற்று முகமையை அமைக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கையெழுத்திட்டார்.
1952
எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் புவாத் மன்னன் ஆக்கப்பட்டான்.
1953
பனிப்போர்: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கியூபப் புரட்சி ஆரம்பமானது.
1956
சுயெஸ் நெருக்கடி: அஸ்வான் அணைக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சுயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.
1957
குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொசு அர்மாசு கொல்லப்பட்டார்.
1963
உலகின் முதலாவது புவி நிலைத் துணைக்கோள் சின்கோம் 2 அமெரிக்காவில் ஏவப்பட்டது.
1963
யுகோசுலாவியாவில் ஸ்கோப்ஜே நகரில் (இன்றைய மாக்கடோனியக் குடியரசு) நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
1965
மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
1971
அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1974
ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
1977
கனடா, கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகாரபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1993
தென் கொரியாவில் மொக்போ வானூர்தி நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஏசியானா ஏர்லைன்சு விமானம் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 116 பேரில் 68 பேர் உயிரிழந்தனர்.
1994
எஸ்தோனியாவில் இருந்து உருசியப் படைகளை வெளியேற்ற அரசுத்தலைவர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
1999
கார்கில் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
2005
டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.
2005
மும்பையில் 24 மணி நேரத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,000 பேர் வரை உயிரிழந்தனர்.
2008
இந்தியாவின் அகமதாபாத் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர், 200 பேர் வரை காயமடைந்தனர்.
2016
சூரிய ஆற்றலில் இயங்கும் சோலார் இம்பல்சு-2 வானூர்தி புவியைச் சுற்றி வந்தது.
















