1983
இலங்கையில் தமிழருக்கு எதிரான கறுப்பு ஜூலை கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது. ஈழப்போரின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.
1996
கொழும்பு, தெஹிவளையில் அளுத்கமை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.
2001
கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
1866
அமெரிக்க உள்நாட்டுப் போரை அடுத்து டென்னிசி முதலாவது மாநிலமாக மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்தது.
1901
வங்கி ஒன்றில் களவெடுத்த குற்றச்சாட்டில் ஒகையோ கொலம்பசு நகரில் சிறை வைக்கப்பட்டிருந்த ஓ ஹென்றி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1911
பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார்.
1915
சிகாகோ ஆற்றில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.
1922
பாலத்தீனம் தொடர்பான பிரித்தானியக் கட்டளையின் மாதிரி வரைபை உலக நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொண்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது.
1923
கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.
1924
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
1943
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜேர்மனியின் ஆம்பர்கு நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர், 280,000 கட்டடங்கள் அழிந்தன.
1959
மாஸ்கோவில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கத் துணைத் தலைவர் ரிச்சார்ட் நிக்சனும் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ்வும் புகழ் பெற்ற அடுப்படி விவாதத்தில் கலந்து கொண்டனர்.
1969
நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1977
லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4 நாள் போர் முடிவுக்கு வந்தது.
1982
ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் உயிரிழந்தனர்.
1991
இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.
2007
லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலத்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.
2013
எசுப்பானியாவில் விரைவுத் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில், 78 பயணிகள் உயிரிழந்தனர்.
2014
புர்க்கினா பாசோவில் இருந்து அல்ஜியர்சுக்கு சென்று கொண்டிருந்த ஏர் அல்சீரியா விமானம் 5017 மாலிவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் (116 பேரும்) உயிரிழந்தனர்.

















