தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘குபேரா’ படம் வெளியானது. தற்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி, நடிக்கின்றார்.
இதற்கிடையில் ரஜினிகாந், விஜய் ஆகியோர் அவ்வப்போது இரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தனுசும் இரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கின்றார்.
இரசிகர்களின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று, சென்னை சாலி கிராமத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவை தொடர்ந்து 25 வாரங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்) அவர் முன்பதிவு செய்துள்ளார். அதன்படி, வருகிற 27 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 500 பேர் வீதம் தனது இரசிகர்களை சந்தித்துப் பேச அவர் முடிவு செய்திருக்கின்றார்.
இந்த வாரமே (நேற்று முன்தினம்) தனுஷ் இரசிகர்களை சந்தித்திருக்க வேண்டியது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்க முடியவில்லை. ரஜினி வழியை பின்பற்றி இருக்கும் தனுஷ், விஜய் வழியில் அரசியலில் இறங்குவாரா? என்பது விரைவில் தெரிய வரும்.
இது தொடர்பான முக்கிய அறிவிப்பை தனுஷ் வெளியிட இருக்கிறார் என்றும் அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூறுகின்றார்கள். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.









